'டிக்கிலோனா' அப்டேட்: அப்பாவின் ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்த யுவன்

By செய்திப்பிரிவு

'டிக்கிலோனா' படத்தில் இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார் யுவன்.

எழுத்தாளர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகி வந்த படம் ‘டிக்கிலோனா’. ‘பலூன்’ இயக்குநர் சினிஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதில் சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

நேற்று (ஆகஸ்ட் 21) இயக்குநர் கார்த்திக் யோகியின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு மாலை 5 மணியளவில் 'டிக்கிலோனா' ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதில் டைம் மிஷினை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கதையில் வழக்கமான சந்தானத்தின் கலாய்ப்புகள், யோகி பாபுவின் காமெடி என ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. இதில் தனது அப்பா இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடலொன்றை ரீமிக்ஸ் செய்திருக்கிறார். சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'மைக்கேல் மதன காமராஜன்'. இப்போதும் இந்தப் படத்தின் காமெடிக் காட்சிகள் ரசிக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் படத்தில் இடம்பெற்ற 'பேர் வைச்சாலும் வைக்காமல்' என்ற பாடல் மிகவும் பிரபலம். ஏனென்றால், ஒரே பாடலில் மூன்று கமல் ஜோடிகளுக்குள் இடையே நடக்கும் கலாட்டாவை காட்சிப்படுத்தி இருப்பார்கள். இந்தப் பாடலை 'டிக்கிலோனா' படத்துக்காக ரீமிக்ஸ் செய்திருக்கிறார் யுவன். இதற்காக இளையராஜாவிடம் அனுமதி பெற்று இதன் பணிகளை முடித்திருக்கிறார்.

'டிக்கிலோனா' படத்தின் ட்ரெய்லர் படி, சந்தானத்துக்கு 3 கெட்டப்கள். மூவரும் ஒரே பாடலில் வருவதுபோல, படத்தில் இந்த ரீமிக்ஸ் பாடல் இருக்கும் எனத் தெரிகிறது.

'டிக்கிலோனா' படத்தில் யோகி பாபு, அனகா, ஷிரின், ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷா ரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, இட் ஈஸ் பிரசாந்த் உள்ளிட்ட பலர் சந்தானத்துடன் நடித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்