த்ரிஷாவின் இன்ஸ்டா பக்கத்திலிருந்த அனைத்து பதிவுகளும் நீக்கம் - பின்னணி என்ன?

By செய்திப்பிரிவு

தமிழின் முன்னணி நடிகையாக திகழ்பவர் த்ரிஷா. சமூக வலைதளங்களில் இவரை கணிசமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 24 லட்சம் பேர் இதுவரை பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை அவர் பதிவிட்டிருந்த பெரும்பாலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்டிருந்தன.

குழம்பிப் போன ரசிகர்கள் என்ன காரணம் என்று அவரது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வியெழுப்பி வந்தனர். இன்னும் சிலர் த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும் சந்தேகம் எழுப்பினர்.

ஆனால் இதுவரை த்ரிஷாவின் தரப்பிலிருந்து இதற்கான காரணம் குறித்து சமூக வலைதளங்களில் எந்தவொரு விளக்கமும் தரப்படவில்லை.

இது குறித்து த்ரிஷா தரப்பில் விசாரித்தபோது, தொடர்ந்து தனது திரைப்படங்கள் உள்ளிட்ட அப்டேட்களுக்காக இன்ஸ்டாகிராம் பதிவுகளையும் ஸ்டோரிகளையும் த்ரிஷா பயன்படுத்தி வந்ததாகவும், பழைய குப்பைகளையெல்லாம் அவர் அகற்றவிரும்பியதால் அனைத்து பதிவுகளையும் நீக்கியதாகவும் கூறப்படுகிறது.

தற்போது த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்ட ஏழு பதிவுகள் மட்டுமே உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

30 mins ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்