காஜல் அகர்வாலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக வெளியான செய்திக்கு அவருடைய தரப்பு மறுப்பு தெரிவித்தது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். 2004-ம் ஆண்டு இந்தி திரையுலகில் அறிமுகமானாலும், 2007-ம் ஆண்டு தெலுங்கில் அறிமுகமானார். அதே ஆண்டு 'பழநி' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். பின்பு தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகர்கள் அனைவருக்கும் நாயகியாக நடித்துவிட்டார்.
சில ஆண்டுகளாகவே காஜல் அகர்வாலுக்கு திருமணம் என்பது குறித்து செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. அனைத்துக்குமே காஜல் தரப்பு மறுப்பு தெரிவித்து வந்தது. தற்போது, காஜல் அகர்வாலுக்கு மும்பை தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும், அவருடைய பெயர் கவுதம் எனவும் தெலுங்கு மீடியா உலகில் செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக காஜல் அகர்வால் தரப்பில் விசாரித்த போது, "அவர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆகையால் திருமண குறித்து வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை" என்று தெரிவித்தார்கள்.
» சுஷாந்துக்கான சர்வதேசப் பிரார்த்தனை: 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாகத் தகவல்
» சமூக வலைதளத்தில் ஆமிர்கானுக்கு கிளம்பிய கடும் எதிர்ப்பு: பின்னணி என்ன?
தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'ஆச்சாரியா', இந்தியில் 'மும்பை சாகா', தமிழில் 'இந்தியன் 2' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் காஜல் அகர்வால்
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago