கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள படம் தொடர்பான கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லையென்றால் ஏப்ரல் 9-ம் தேதி படம் வெளியாகி இருக்கும். தற்போது அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து, திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.
'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதில் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 50-வது படமாகும்.
இதனிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' ஆகஸ்ட் 12-ம் தேதி டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதற்காக அளித்துள்ள பேட்டியில் "கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்தை இயக்கும் படம்..." என்று கேட்கப்பட்ட கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பதாவது:
» அப்பா உடல்நலனில் நல்ல முன்னேற்றம்: எஸ்.பி.சரண் தகவல்
» தோனியை மேற்கொளிட்டு சிவகார்த்திகேயனுக்கு புகழாரம் சூட்டியுள்ள சீனு ராமசாமி
"இப்போதைக்கு இது பற்றி நான் பதில் சொல்ல முடியாது. இன்னும் பேச்சுவார்த்தை தான் நடந்து வருகிறது. எதுவும் முடிவாகவில்லை. என் அடுத்த படத்தை எழுத ஆரம்பித்திருக்கிறேன். மற்ற விஷயங்களைத் தயாரிப்பு தரப்பு தான் சொல்ல வேண்டும். இன்னும் நேரம் இருக்கிறது என நினைக்கிறேன்"
இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago