தோனியின் ஓய்வு அறிவிப்புக்குப் பிறகு பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளத்தில் உணர்ச்சிகரமாகப் பதிவிட்டுள்ளனர்.
இரு உலகக்கோப்பைகளை இந்திய அணிக்குப் பெற்றுக்கொடுத்தவர், ஐசிசியின் 3 விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், கேப்டன் கூல் , ஜென்டில்மேன் விளையாட்டுக்கு உரித்தாக விளங்கியவர் என்ற பெருமைக்குரியவர் தோனி.
இந்திய கிரிக்கெட்டுக்காக 16 ஆண்டுகள் விளையாடிய தோனி, நேற்று (ஆகஸ்ட் 15) இரவு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருடைய ஓய்வு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
தோனி ஒய்வு அறிவிப்பு குறித்து திரையுலக பிரபலங்கள் வெளியிட்டுள்ள ட்வீட்களின் தொகுப்பு:
மோகன்லால்: சென்று வாருங்கள் கேப்டன் தோனி. உங்கள் எதிர்கால முயற்சிகள் அத்தனைக்கும் என் வாழ்த்துகள்
மகேஷ் பாபு: யாரால் அந்த சிக்ஸரை மறக்க முடியும் ! 2011 உலக சாம்பியன் இந்தியா ! வாங்கடே மைதானத்தில் நான் இருந்தேன், பெருமையும், கண்ணீரும் பொங்கியது. கிரிக்கெட் இனி இப்படி இருக்காது. சிரம் தாழ்த்து வணங்குகிறேன் தோனி.
ராஜமெளலி: நீங்கள் எங்களுக்குப் பொழுதுபோக்குத் தந்தீர்கள் ! பெருமைப் படச் செய்தீர்கள் ! எல்லாவற்றையும் விட, அதிக அழுத்தமான தருணங்களிலும் அமைதியாக இருந்து எங்களுக்கு ஊக்கம் தந்தீர்கள். இந்தத் தருணத்தை ஏற்றுக்கொள்வது மிகக் கடினமாக இருக்கிறது. வரப்போகும் பல தலைமுறைகளுக்கு நீங்கள் வழிகாட்டியாக இருப்பீர்கள் தோனி நன்றி.
அபிஷேக் பச்சன்: சகாப்தத்தின் முடிவு. அனைத்து நினைவுகளுக்கும் நன்றி தோனி. உங்கள் அடுத்த கட்ட ஆட்டத்துக்கு வாழ்த்துகள். ஒரு ஒட்டுமொத்த தேசத்தை நம்பிக்கையாலும், பெருமையாலும் நிரப்பினீர்கள். அனைத்து கட்டத்திலும் மிகச்சிறந்தவர்களில் ஒருவர்.
நிவின் பாலி: சகாப்தங்கள் ஓய்வு பெறுவதில்லை ! அழகான நினைவுகளுக்கு நன்றி ! நீங்கள் தான் என்றும் எனது கேப்டனாக இருப்பீர்கள் !
இயக்குநர் ப்ரியதர்ஷன்: கிரிக்கெட்டும் தோனியும் இருக்கும் வரை, அவரால் என்னைப் போன்ற, கிரிக்கெட் உலகிற்கு அவரது பங்களிப்பைக் கண்டு ஆராதிக்கும் லட்சக்கணக்கானவர்களின் மனதிலிருந்து ஓய்வு பெற இயலாது.
சிவகார்த்திகேயன்: எங்களை அதிகபட்சம் ஊக்குவித்ததற்கும், பொழுதுபோக்கியதற்கும் உங்களுக்குப் பெரிய நன்றி. நீங்கள் என்றுமே ஒரு அற்புதமான தலைவர் தோனி. எங்களை ஆச்சரியப்படுத்த உங்களிடம் வெவ்வேறு திட்டங்கள் இருக்கும் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். உங்கள் அடுத்த ஹெலிகாப்டர் ஷாட்டுக்காகக் காத்திருக்கிறேன்.
கார்த்திக் சுப்புராஜ்: அனைத்து ஊக்கத்துக்கும், தலைமைப் பண்புகளுக்கான பாடங்களுக்கும், நேர்மையான போட்டி மனப்பான்மையைக் காட்டியதற்கும் நன்றி. எங்கள் உள்ளங்களிலிருந்து நீங்கள் என்றும் ஓய்வு பெற முடியாது. உங்களுக்கு உரித்தான ஒரு பிரிவுபசாரத்தை களத்தில் தர உங்கள் ரசிகர்களாகிய நாங்கள் தவறிவிட்டோம். சிஎஸ்கேவுக்காக நீங்கள் களமிறங்குவதைப் பார்க்கக் காத்திருக்கிறோம்.
கொரட்டலா சிவா: பல நேரங்களில், ஆரம்ப விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு, மிடில் ஆர்டரில் இருந்த ஒரு பெயர் நாம் நம்பிக்கை இழக்க விடாமல் செய்தது. எம் எஸ் தோனி. உண்மையான போராளி. இந்த ஆட்டத்தில் மறக்க முடியாத நினைவுகளை எங்களுக்குத் தந்ததற்கு நன்றி. நீங்களும், உங்கள் ஹெலிகாப்டர் ஷாட்டும் இல்லாத குறையை நாங்கள் உணர்வோம். நன்றி தோனி
பிரகாஷ்ராஜ்: எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வரும். ஆனால் இது அப்படி முடிந்திருக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன். நன்றி தோனி. எனக்கு அதிக ஊக்கத்தைத் தரும் ராக்ஸ்டாராக நீங்கள் என்றும் இருப்பீர்கள். உங்கள் புதிய பயணம் சிறக்க என் வாழ்த்துகள்.
விஷால்: தோனி தான் எனக்கு மிகவும் பிடித்தமான கிரிக்கெட் வீரர். நிகரில்லா கேப்டன். இந்தியாவுக்குக் கிடைத்த சிறந்த கேப்டன்களில் ஒருவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமுமே ஆட்டத்தில் நீங்கள் இல்லாத குறையை உணரும்.
அனிருத்: எல்லா காலத்திலும் மிகச் சிறந்த #7
ப்ரித்விராஜ்: இந்தியாவின் மிகச்சிறந்த விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். சென்று வாருங்கள் சாம்பியன் கேப்டன். நீல - வெள்ளை உடைகளில் நீங்கள் தோன்றுவதை இனி பார்க்க முடியாமல் போவதற்கு வருந்துவேன்.
ரம்யா: சென்று வாருங்கள் தல எம் எஸ் தோனி. ஒரு மொத்த சகாப்தமும் முடிந்துவிட்டதைப் போல இருக்கிறது. உங்கள் ஆட்டத்தின் மூலமாகவும், வாழ்க்கையை வாழ்ந்த விதத்தின் மூலமாகவும் எங்களை பெருமைபடுத்தி விட்டீர்கள். உங்களை வணங்குகிறோம்.
ஆதி: நீங்கள் இல்லாத குறையை உணர்வோம் கேப்டன் கூல் எம் எஸ் தோனி. அனைத்து அற்புதமான நினைவுகளுக்கும் நன்றி.
சதீஷ்: இனி இப்படி ஒரு ராணுவ கட்டுக்கோப்பை இந்திய அணியில் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. ஒழுக்கத்திலும் தரத்திலும் நம் அணியை உலக அளவிற்கு உயர்த்திய உண்மையான நேர்மையான தலைவன் தோனி. இந்திய கிரிக்கெட்டில் நீங்கள் இல்லாத குறையை உணர்வேன். ஆனால் வேறு வடிவில் தலைவனாக எதிர்பார்க்கிறோம்
மோகன் ராஜா: நான் ஒரு கிரிக்கெட் வெறியனாக இருந்தேன். வாழ்க்கை எனது முன்னுரிமைகள் என்னவாக இருக்க வேண்டும் ந்று மாற்றியபோது, கிரிக்கெட் இரண்டாம் பட்சமாக ஆனது. தோனி என்கிற இந்த மனிதரின் வருகைக்குப் பின் தான் நான் மீண்டும் அதே போன்ற ரசிகனானேன். இவ்வளவு வருடங்களாக எங்களை உற்சாகப்படுத்தியதற்கு உங்களுக்கு நன்றி சொல்லித் தீராது.
ராஜேஷ் எம். செல்வா: தலைவர்கள் ஓய்வு பெறுவதில்லை. நீங்கள் என்றுமே எங்கள் ஊக்கமாக இருப்பீர்கள். நன்றி கேப்டன்.
அர்ச்சனா கல்பாத்தி: கிரிக்கெட் மீது என்னை மீண்டும் காதல் வயப்படச் செய்ததற்கு நன்றி தோனி. 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றி எங்கள் வாழ்வில் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்றாக இருக்கும். அமைதியான தலைவர்கள் உருவாக ஒரு தலைமுறைக்கு ஊக்கமாக இருந்ததற்கு நன்றி.
சாந்தனு: நீங்கள் எங்களுக்கு மிகச் சிறந்த நினைவுகளைத் தந்தீர்கள். நீங்கள் இல்லாத இந்திய கிரிக்கெட் மீண்டும் இப்படியே இருக்காது. உலகக் கோப்பையையும் இன்னும் பல பொக்கிஷங்களையும் நீங்கள் மீண்டும் கொண்டு வந்தீர்கள். களத்திலும், களத்தைத் தாண்டியும், ஒவ்வொரு இந்தியருக்கும் நீங்கள் ஊக்கமாக இருந்தீர்கள். சென்று வாருங்கள்.
அறிவழகன்: வெற்றியையும் தோல்வியையும் சமமாக ஏற்றுக்கொண்டு, ஆர்ப்பாட்டமில்லாத கேப்டனாக இருந்ததன் மூலம் வாழ்க்கைக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்த ஒரே விளையாட்டு வீரர் தோனி. உங்கள் ஆட்டத்தின் மூலம் எங்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்தீர்கள். பல சிறந்த வீரர்கள் இனி வரலாம். ஆனால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றது ஒரே ஒருவர் தான். அது நீங்கள் தான். உங்களுக்கு என் வணக்கம். என்றும் உங்களை நேசிப்பேன்.
விக்ரம் பிரபு: மிக முழுமையான ஒரு கிரிக்கெட் வீரர். சவாலைக் கையிலெடுத்துத் தான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தார். சர்வதேச அரங்கில், மூவர்ணத்தில் உங்களது சாதனைகளுக்கும், தந்த பொழுதுபோக்குக்கும் நன்றி. சுத்தமாகத் தன்னலமற்ற நபர் நீங்கள் தான். ஒரு உதாரணமாக வாழ்ந்து காட்டியுள்ளீர்கள்.
கார்த்திக் நரேன்: அனைத்து நினைவுகளுக்கும் நன்றி கேப்டன். தோனி தோனி என இவ்வளவு வருடங்களும் நான் கூச்சலிட்டது உங்களுக்குக் கேட்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உடைந்த மனதோடு, ஆனால் மகிழ்ச்சியாக வழியனுப்பி வைக்கிறேன். கடைசியாக "தோனி தோனி"
தமன்: நீங்கள் எங்கள் மனங்களிலிருந்து என்றும் ஓய்வுபெற மாட்டீர்கள். அன்பார்ந்த தோனி, பல நூற்றாண்டுகளுக்கு, வாழ்நாளுக்கு, நீங்கள் தான் எங்களுக்குப் பிடித்தமான கேப்டனாக இருப்பீர்கள்.
விஷ்ணு விஷால்: அற்புதமான துவக்கம், அற்புதமான பயணம், அற்புதமான ஆட்ட மனப்பான்மை, அற்புதமான தலைவர், அற்புதமான நினைவுகள், அற்புதமான எம் எஸ் தோனி. உலகம் முழுவதிலும் பல்வேறு மக்களுக்கு ஊக்கமும், பொழுதுபோக்கும் தந்ததற்கு நன்றி. தொடர்ந்து எங்களை ஊக்கப்படுத்துங்கள்.
ராதிகா: தலைமைக்குப் புதிய அர்த்தத்தைக் கொடுத்தீர்கள். உங்கள் அமைதியும், நடத்தையும் பலருக்கு ஊக்கம். உங்கள் ஆட்டத்தில் முழு ஈடுப்பாட்டைத் தந்தீர்கள். அதே அமைதியோடு விடை பெற்றுள்ளீர்கள். நீங்கள் இல்லாத குறையை உணர்வோம் தோனி.
வரலட்சுமி: தோனி போன்ற ஒரு மனிதரைப் பற்ற என்ன சொல்வது. உங்கள் ஆட்டத்திற்கு நன்றி மட்டுமே எங்களால் சொல்ல முடியும். எங்களை பெருமைப்படுத்தியதற்கு நன்றி. உங்கள் ஒவ்வொரு மூச்சோடும் எங்களுக்குப் பொழுதுபோக்கு தந்ததற்கு நன்றி. உங்களைப் போன்ற இன்னொருவர் இனி கிடையாது. நீங்கள் தான் என்றும் எங்கள் கேப்டனாக இருப்பீர்கள். உங்களை நாங்கள் நேசிக்கிறோம் தோனி
சீனு ராமசாமி: ஒரு வீரனுக்கு விடை தரவே முடியாது, தோனி மைதானத்தை விட்டு வெளியேறுவது என்பது வேறு விளையாட்டை விட்டு வெளியேறுவது என்பது வேறு, எப்போதும் கிரிக்கெட்டோடு இருங்கள். இந்த தேசத்திற்குக் கற்றுத்தாருங்கள். உங்கள் சாதனைகள் இளைய வீரர்களுக்குப் பாடம் எளியவர்கள் முயன்றால் வெல்லலாம் என்கிற வேதம்.
முக்கிய செய்திகள்
சினிமா
55 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago