நடிகராக அறிமுகமாகும் செல்வராகவன்: தனுஷ் வாழ்த்து

By செய்திப்பிரிவு

'சாணிக் காயிதம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் செல்வராகவனுக்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராக்கி'. இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. தற்போது அருண் மாதேஸ்வரனின் அடுத்த படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகவுள்ளார் செல்வராகவன். 'சாணிக் காயிதம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் தொடங்கும் எனத் தொடங்குகிறது.

இயக்குநர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாவதால், பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள். செல்வராகவனின் தம்பி நடிகர் தனுஷ், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"'சாணிக் காயிதம்' படத்தின் மூலம், உங்கள் நடிப்பின் வலிமையை நான் பார்த்ததைப் போல இந்த உலகமும் பார்க்கட்டும் செல்வா சார்"

இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

18 mins ago

சினிமா

32 mins ago

சினிமா

40 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்