சூப்பர் சிங்கர்ஸ், ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2: விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொடக்கம்!

By மகராசன் மோகன்

ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 மற்றும் விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் ஆஃ ப் சாம்பியன்ஸ்' நிகழ்ச்சியும், ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 ஆகிய இரண்டு ரியாலிடி நிகழ்ச்சிகளும் இந்த வாரம் ஞாயிறு முதல் தொடங்குகின்றன.

கரோனா பாதிப்புக்குப் பிறகு சின்னத்திரை சேனல்களில் சீரியல்கள், ரியாலிடி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்த சூழலில் தற்போது அரங்குகள் மற்றும் வீடுகளில் ஷூட்டிங் என்பதால் சில கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில், விஜய் டிவி புதிய சீரியல்களுக்கான ஒளிபரப்பை கடந்த சில வாரங்களுக்கு முன்பே தொடங்கியது. தற்போது 'சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் ஆஃ ப் சாம்பியன்ஸ்' நிகழ்ச்சியும், ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 ஆகிய இரண்டு ரியாலிடி நிகழ்ச்சிகளையும் வரும் ஞாயிறு முதல் ஒளிபரப்பை தொடங்குகின்றன.

ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2

இதில் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 விளையாட்டு நிகழ்ச்சியில் இரண்டு குழுக்கள் இடம்பெறும். பிரபலங்கள் இதன் போட்டியாளர்களாகப் பங்குபெறுவர் (ஒரு அணிக்கு 3 நபர்கள்). இந்த இரு அணிகளும் இசை சார்ந்த விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர் . இசை மற்றும் பாடல்களுடன் தொடர்புடைய நான்கு சுவாரஸ்யமான சுற்றுகள் இருக்கும். ஒவ்வொரு சுற்றிலும் ஒரு குறிப்பிட்ட பரிசுத் தொகை அணிகளுக்கு வழங்கப்படும். நான்கு சுற்றுகளின் முடிவில், வென்ற அணி லட்சத்தில் பரிசுத் தொகையை எடுத்துச் செல்ல முடியும். நிகழ்ச்சியை பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்குவார்.

சூப்பர் சிங்கர்!

இம்முறை புதிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இதற்கு முன்பு பங்கேற்ற செந்தில் கணேஷ், ராஜலட்சுமி, திவாகர், சாய் சரண், சந்தோஷ், மாளவிகா, ஹரிப்ரியா,மூக்குத்தி முருகன் உள்ளிட்ட போட்டியாளர்களும், வெற்றியாளர்களும் பங்கேற்க உள்ளனர். இதில் கர்நாடக இசை பாடல்கள், ஜாஸ், நாட்டுப்புற பாடல்கள், ராக் இசை போன்ற சுற்றுகள் இடம்பெறும். ஒரு கட்டத்தில் இரண்டு குழுக்களாக பிரிந்து போட்டியிடுவர்.

நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பிரபல பின்னணி பாடகர்கள் சங்கர் மஹாதேவன், மனோ, சித்ரா, சுபா, உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயால் மற்றும் ஸ்வேதா, நகுல், கல்பனா & எஸ்.பி.பி சரண் மற்றும் மேலும் பலர் பங்குபெறுவர். நிகழ்ச்சியை மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்குகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்