#GreenIndiaChallenge சவாலை ஏற்றதற்காக தெலங்கானா எம்பி, விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
#GreenIndiaChallenge என்பது தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இதனை தொடங்கி வைத்து, அதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் தெலங்கானா எம்.பி சந்தோஷ்குமார். மேலும், தெலங்கானாவில் உள்ள பிரபலங்கள் அனைவருடைய வீட்டிற்குள் மரக்கன்றுகள், விதைகள் என அனுப்பி வைத்து வருகிறார். இது தொடர்பாக பல்வேறு பிரபலங்கள் புகைப்படங்களுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஆகஸ்ட் 9-ம் தேதி தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அன்றைய தினம் #GreenIndiaChallenge என்ற சவாலில் பங்கேற்று செடி நட்டி, அதே போன்றதொரு சவாலை விஜய்க்கு விடுத்தார். ஏனென்றால் ஒருவர் மரக்கன்றை நட்டு அதனைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டு, மேலும் மூவருக்கு அதை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே #GreenIndiaChallenge சவாலாகும்.
அந்தச் சவாலை ஏற்றுக் கொண்ட விஜய் செடி நட்டி அதன் புகைப்படத்தை வெளியிட்டார். ஆனால், யாருக்கும் சவால் விடுக்கவில்லை. விஜய் செடி நடும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் கொண்டாடித் தீர்த்தார்கள். அவருடைய அலுவலகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோரால் ரீ-ட்வீட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
» இயக்குநர் சிவா பிறந்தநாள் ஸ்பெஷல்: குடும்பப் படங்களின் புதுயுக சிற்பி
» இரண்டாவது குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்த சைஃப் - கரீனா
இந்தளவுக்கு #GreenIndiaChallenge பிரபலமானதைத் தொடர்ந்து சந்தோஷ் குமார் எம்.பி தனது ட்விட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:
"பிரபலங்களால் செய்ய முடிவது இதுதான். உங்கள் சக நடிகரான மகேஷ்பாபுவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி விஜய் . உங்கள் ரசிகர்களின் பக்கத்திலிருந்து கிடைத்த மிகப்பெரிய ஆதரவை நாங்கள் கவனித்தோம். நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றடைய வேண்டும் என்ற #GICன் எண்ணத்தில் எந்த தொய்வும் ஏற்படாது என்று நம்புகிறோம்”
இவ்வாறு சந்தோஷ் குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago