'தெளலத்' படத்தின் போஸ்டரில் தனது புகைப்படத்தை வைத்து விளம்பரப்படுத்தி இருப்பதால் யோகி பாபு அதிர்ச்சியடைந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு தான் சிறு கதாபாத்திரங்களில் நடித்த படத்தில் கூட, நான் தான் கதாநாயகன் என விளம்பரப்படுத்துவதாக யோகி பாபு வேதனை தெரிவித்தார். இதனால் தனது இதர படங்கள் பாதிக்கப்படுவதாகவும், இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாம் என வேண்டுகோளும் விடுத்தார்.
இதனிடையே, ரைட் ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாராகியுள்ள படம் 'தெளலத்'. ஷக்தி சிவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அவரே நாயகனாகவும் நடித்துள்ளார். இதில் ராஷ்மி கெளதம், ஜெயபாலன், ஐசக், வைரவன், அஜய் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக இந்தப் படம் தயாரிப்பில் உள்ளது.
இந்தப் படத்தின் புதிய போஸ்டரில் யோகி பாபுவை மட்டும் மையப்படுத்தி வெளியிட்டுள்ளனர். இது யோகி பாபுவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக யோகி பாபு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
» சஞ்சய் தத் உடல்நிலை: மான்யதா தத் வேண்டுகோள்
» 'ராட்சஷக் கலைஞன்' கமல் 61; ‘களத்தூர் கண்ணம்மா’ வெளியாகி 61 ஆண்டுகள்
"இன்று இந்த விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ’தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு யோகி பாபு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
43 mins ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago