திரையுலகில் 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு வாழ்த்திய அனைவருக்கும் ரஜினி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த், 'அபூர்வ ராகங்கள்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.
பாலசந்தர் இயக்கத்தில் உருவான இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது. அதற்குப் பிறகே பல்வேறு இயக்குநர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வந்தால் ரஜினி திரையுலகிற்கு வந்து 45 ஆண்டுகள் ஆகின்றன.
இதனை முன்னிட்டு ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தை சமூக வலைதளத்தில் மேற்கொண்டு வருகிறார்கள். இன்று (ஆகஸ்ட் 9) ரஜினியின் 45 ஆண்டுகள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மோகன்லால், மம்மூட்டி, சிவகார்த்திகேயன் தொடங்கி முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
» ஹன்சிகா பிறந்த நாள் ஸ்பெஷல்: அழகாலும் அன்பாலும் ஈர்த்தவர்!
» இந்திய சினிமாவுக்கு ரஜினியின் பங்கு மிகப்பெரியது: மோகன்லால் புகழாரம்
முன்னணி பிரபலங்கள் பலரும் தனக்கான போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்ததை முன்னிட்டு, ரஜினி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. #நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை".
இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago