'அருவா' படம் கைவிடப்பட்டதால், அருண் விஜய் நாயகனாக நடிக்கும் படத்தை ஹரி இயக்கவுள்ளார்.
சூர்யா நடிப்பில் உருவாகும் 'அருவா' படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருந்தார் ஹரி. ஞானவேல்ராஜா தயாரிக்கவிருந்த இந்தப் படத்துக்கு ஹரி இசையமைப்பாளராகப் பணிபுரிய இருந்தார். இதன் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தன.
தற்போது இந்தப் படம் கைவிடப்பட்டதாகத் தெரிகிறது. ஏனென்றால், அருண் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்கவுள்ளார் ஹரி. இதன் பணிகளை தற்போது மும்முரமாகக் கவனித்து வருகிறார். 'அருவா' படத்துக்குக் கொடுத்த தேதிகளை அப்படியே பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்துக்குக் கொடுத்துவிட்டார் சூர்யா.
எதனால் 'அருவா' படம் நடைபெறவில்லை என்ற தகவல் தெரியவில்லை. 'ஆறு', 'வேல்', 'சிங்கம்', 'சிங்கம் 2', 'சி 3' ஆகிய 5 படங்களில் இணைந்து பணிபுரிந்த கூட்டணி இப்போது பிரிந்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
» ஆயுஷ்மான் குரானாவுக்கு நாயகியாக வாணி கபூர் ஒப்பந்தம்
» 'பெல் பாட்டம்' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் 'தலைவாசல்' விஜய்
அருண் விஜய்யின் சகோதரி ப்ரீதா விஜயகுமாரின் கணவர்தான் ஹரி. இருவரும் முதன்முறையாக இணைந்து படம் பண்ணவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பணிகள் உடனடியாகத் தொடங்கும் எனத் தெரிகிறது. ஏனென்றால், 'சினம்' படத்துக்கான டப்பிங் தொடக்கம் தொடர்பான புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாயின. அதில் அருண் விஜய் முழுக்க மீசையை வளர்த்து முக அமைப்பை முழுமையாக மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago