தனுஷின் 'கர்ணன்' படத்தைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக ராஜிஷா விஜயன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கர்ணன்'. தாணு தயாரித்து வரும் இந்தப் படத்தில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, கெளரி கிஷன், லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 80% முடிவடைந்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் இதர காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
'கர்ணன்' படத்தை முடித்துவிட்டு, விஜய் சேதுபதி நடிக்கவுள்ள '800' படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளார் ராஜிஷா விஜயன். இது இலங்கை கிரிக்கெட் அணியில் பிரபலமான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் படமாகும்.
ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கப்படவுள்ளன. விஜய் சேதுபதி, ராஜிஷா விஜயன் ஆகியோருடன் நடிக்கவுள்ள இதர நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago