'முதல் நீ முடிவும் நீ' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

தர்புகா சிவா இயக்குநராக அறிமுகமாகும் 'முதல் நீ முடிவும் நீ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மாதவன் வெளியிட்டுள்ளார்.

2015-ம் ஆண்டு வெளியான ‘ராஜதந்திரம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தர்புகா சிவா. பின்னர், அதே ஆண்டு வெளியான ‘கிடாரி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.

சில படங்களில் நடித்தாலும், ‘பலே வெள்ளையத்தேவா’, ‘நிமிர்’, ‘ராக்கி’ மற்றும் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தும் வந்தார். இதில் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

நடிகர், இசையமைப்பாளர் என்பதைத் தொடர்ந்து இயக்குநராகவும் முடிவு செய்தார் தர்புகா சிவா. முற்றிலும் புதுமுகங்கள் நடித்த படத்தை இயக்கி வந்தார். சமீர் பரத் ராம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் பொறுப்பு மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் தர்புகா சிவா.

'முதல் நீ முடிவும் நீ' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மாதவன் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரின் மூலம் முழுக்க பள்ளி மாணவர்களுக்கு இடையே நடக்கும் கதை என்பது தெளிவாகியுள்ளது.

இந்தப் படத்தின் இசை உரிமையை சோனி மியூஸிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தர்புகா சிவாவுக்கு இயக்குநராக முதல் படம் என்பதால், அவருடைய நண்பர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்