'லிப்ட்' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் காயத்ரி ரெட்டி

By செய்திப்பிரிவு

கவின் நடிப்பில் உருவாகி வரும் 'லிப்ட்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் காயத்ரி ரெட்டி நடித்துள்ளார் என்று படக்குழு அறிவித்துள்ளது.

'பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் கவின். 'கனா காணும் காலங்கள்', 'சரவணன் மீனாட்சி' ஆகிய நாடகங்களை விட 'பிக் பாஸ் 3' மூலம் அனைத்துத் தரப்பு மக்களாலும் அறியப்பட்டார்.

'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு முன் 'நட்புனா என்னானு தெரியுமா' என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. தற்போது 'பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு 'லிப்ட்' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

வினித் வரபிரசாத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவினுக்கு நாயகியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் காயத்ரி ரெட்டி நடித்து வருவதாகப் படக்குழு அறிவித்துள்ளார். இவர் 'பிகில்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது நினைவுகூரத்தக்கது. '

லிப்ட்' படத்தில் நடித்திருப்பது குறித்து காயத்ரி ரெட்டி கூறியிருப்பதாவது:

"இந்தப் படக்குழுவினர் அனைவருமே மிக நேர்த்தியாகச் செயல்படக் கூடியவர்கள். முக்கியமாக படத்தின் இயக்குநர் வினித் வரபிரசாத் செட்டில் துளி குழப்பம் கூட இல்லாமல் பணியாற்றுவார். அவரது திரைக்கதை பல மேஜிக்கைப் படத்தில் நிகழ்த்தும். படம் பார்க்கும்போது அதை நீங்கள் உணர முடியும்.

மேலும், இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிக வலிமையானதாக இருப்பது எனக்குப் பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. நான் காயத்ரி ரெட்டியாக இல்லாமல் கதாபாத்திரமாகவே மாறியதை நன்றாக உணர்ந்தேன். காரணம் அந்தக் கேரக்டரை அவ்வளவு அழகாக வடிவமைத்திருந்தார் இயக்குநர்.

படத்தில் பல இடங்களில் என் கேரக்டர் எமோஷனலாக இருக்கும். நடிக்கும்போதும் டப்பிங் பேசும்போதும் அதை நான் உணர்ந்தேன். இந்த 'லிப்ட்' படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் படம் வெளியானபின் திரையுலக வாழ்க்கையில் ஒரு நல்ல லிப்ட் கிடைக்கும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்".

இவ்வாறு காயத்ரி ரெட்டி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்