கரோனா தொற்றிலிருந்து மீண்டது எப்படி என்று நடிகர் விஷால் தனது ட்விட்டர் பதிவில் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்றின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துவிட்டது. சென்னையைத் தாண்டி இப்போது பல்வேறு மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் மூலம் சென்னையைத் தாண்டி இதர மாவட்டங்களில் உள்ள மக்கள் மத்தியிலும் கரோனா பயம் தொற்றிக் கொண்டுள்ளது.
இன்று (ஜூலை 25) மாலை முதல் விஷாலுக்கு, அவருடைய அப்பா ஜி.கே.ரெட்டிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்று தகவல் வெளியானது. 20 நாட்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டு, ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக் கொண்டு முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இது தொடர்பாக எந்தவொரு அதிகாரபூர்வ தகவலுமே வெளியாகாமல் இருந்தது.
தற்போது கரோனா தொற்று செய்தி தொடர்பாக விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
» கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே படப்பிடிப்பு நடத்துவது கடினம்: பவன் கல்யாண்
» வேலையின்றி தவித்த நடனக் கலைஞர்களுக்கு உதவிய ஹ்ரித்திக் ரோஷன்
"ஆம், உண்மைதான், என்னுடைய அப்பாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் எனக்கும் அதிக ஜுரம், சளி, இருமல் இருந்தது. என் மேலாளருக்கும் அப்படியே.
நாங்கள் அனைவரும் ஆயுர்வேத மருந்துகளை உட்கொண்டோம். ஒரே வாரத்தில் ஆபத்திலிருந்து வெளியே வந்தோம். தற்போது நாங்கள் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் உள்ளோம்"
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago