மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சீரியலில் நடித்து வருகிறார் ரட்சிதா.
விஜய் டிவி ஜூலை 27 முதல் தங்களது புதிய அத்தியாய நெடுந்தொடர்களை ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்து அதன் ப்ரமோவையும் வெளியிட்டுள்ளது.
இனி எப்போதும் போல, 'பாண்டியன் ஸ்டோர்ஸ்', 'பாரதி கண்ணம்மா', 'ஆயுத எழுத்து', 'செந்தூரப்பூவே', 'தேன்மொழி பி.ஏ' ஆகிய தொடர்கள் மாலை முதல் இரவு வரை, திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பப்படும்.
இதேபோல், 'ஈரமான ரோஜாவே', 'பொம்முகுட்டி அம்மாவுக்கு', 'பொண்ணுக்கு தங்க மனசு', 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'அன்புடன் குஷி' ஆகியவை திங்கள் முதல் சனி வரை மதியம் ஒளிபரப்பாகும்.
இதைத் தவிர, விஜய் டிவியில் மேலும் சில தொடர்கள் புதிதாகத் தொடங்கவுள்ளன. ஜூலை 27 முதல் 'பாக்யலட்சுமி' மற்றும் 'நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2' ஆகிய புத்தம் புதிய தொடர்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரின் முதல் சீசன் நிறைவடைந்து சீசன்-2 ஆரம்பாகவுள்ளது. முதல் அத்தியாயத்தைப் போல புதிய கதைக்களம், காதல் அத்தியாயம் என விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்த உள்ளதாக சேனல் தரப்பு தெரிவித்துள்ளது.
இதில் நாயகியாக ரட்சிதா நடிக்கிறார். இவர் இதற்கு முன் 'சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்தார். அது நிறைவு பெற்றதும் கடந்த சில மாதங்களாக ஜீ தமிழ் சேனலில் 'நாச்சியார்புரம்' தொடரில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago