முன்னணி நடிகையான ஸ்ருதி ஹாசன் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எதுவும் இல்லாமல் பிரபலங்கள் வீட்டிலேயே இருக்கிறார்கள். அவ்வப்போது தங்களுடைய சமூக வலைதளங்கள் மூலம் கரோனா விழிப்புணர்வு மட்டும் ஏற்படுத்தி வருகிறார்கள்.
கமலின் மகளான ஸ்ருதி ஹாசன் மும்பையில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். கரோனா அச்சுறுத்தலால் தனது சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாகவே தான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார். சில சமயங்களில் தான் பாடிய வீடியோக்களையும் ஸ்ருதி பதிவேற்றி வந்தார்.
தற்போது தனியாக யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார் ஸ்ருதி ஹாசன். ஆரோக்கியம், உடற்பயிற்சி, சமையல் கலை, ஒப்பனைக் குறிப்புகள் என தனது சமூக ஊடக ரசிகர்களுக்காகச் செய்து வரும் ஸ்ருதி ஹாசன், தனது இசை சுற்றுப் பயணத்திலிருந்து இதுவரை யாரும் பார்த்திராத காணொலிகளையும், தான் மெட்டமைத்திருக்கும் பாடல்களின் முன்னோட்டங்களையும் தனது யூடியூப் சேனல் வழியாக வெளியிட உள்ளார்.
» அனுராக் காஷ்யப் - ரன்வீர் ஷோரி ட்விட்டரில் மோதல்
» சுஷாந்த் தற்கொலை விவகாரம்: முரணான பதில்களைக் கூறும் பன்ஸாலி, ஆதித்யா சோப்ரா
பிரிட்டன் முழுவதும் இசை நிகழ்ச்சிகளுக்காகச் சுற்றுப் பயணம் செய்துள்ளார் ஸ்ருதி ஹாசன். தனது முதல் ஆல்பத்துக்கான வேலைகளிலும் ஓய்வின்றி ஈடுபட்டு வருகிறார்.
யூடியூப் சேனல் தொடர்பாக ஸ்ருதி ஹாசன் கூறுகையில், "சமூக ஊடகத்தில் ரசிகர்களுடன் உரையாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. தொடர்ந்து இயங்க ஒரு யூடியூப் சேனல்தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
எனது அசல் படைப்புகள் , எனது இசை நிகழ்ச்சிகளின் காணொலிகள், இசை நிகழ்ச்சிகளுக்குப் பின்னால் நடந்த ஏற்பாடுகள் குறித்த காணொலிகள் என அனைத்தும் என் யூடியூப் சேனலில் இருக்கும்" என்று ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago