அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள 'அந்தகாரம்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது.
'பிகில்' படத்தைத் தொடர்ந்து, ஷாரூக்கான் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் அட்லி. இன்னும் ஷாரூக்கான் - அட்லி கூட்டணி தொடர்பாக எந்தவொரு அதிகாரபூர்வத் தகவலும் வெளியாகவில்லை.
இதனிடையே, பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'அந்தகாரம்'. அனைத்துப் பணிகளும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாரானபோது கரோனா அச்சுறுத்தல் தொடங்கியது. மீண்டும் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியாத சூழலில், ஓடிடி நிறுவனங்களிடம் 'அந்தகாரம்' வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 'அந்தகாரம்' படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியது. ஆனால், சில தினங்களிலேயே இந்தப் படம் டிஜிட்டலில் வெளியாக வாய்ப்பில்லை என்றும், திரையரங்க வெளியீடுதான் என்றும் தகவல் வெளியானது. இதனால் 'அந்தகாரம்' வெளியீடு குறித்து எதையும் உறுதிப்படுத்த முடியாத சூழல் உருவானது.
தற்போது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் 'அந்தகாரம்' வெளியீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாகும் என்றும், விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் தென்னிந்திய மொழிப் படமாக 'அந்தகாரம்' இருக்கும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago