கதை தான் ஹீரோ: வரலட்சுமி சரத்குமார்

By செய்திப்பிரிவு

என்னைப் பொறுத்தவரை கதை தான் ஹீரோ என்று வரலட்சுமி சரத்குமார் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

பி.ஜி.முத்தையா தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள படம் 'டேனி'. திரையரங்குகள் திறக்கப்படாத சூழலில் ஆகஸ்ட் 1-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சந்தானமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் வரலட்சுமி சரத்குமாருடன் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ஒரு நாயும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

இந்தப் படத்தை விளம்பரப்படுத்த வரலட்சுமி சரத்குமார் ஜூம் செயலி வழியே பேட்டியளித்தார். அதில் "தெனாவட்டான பெண், கோபமான பெண் என்ற இமேஜ் நீங்கள் நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் உருவாகிறதே..," என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக கூறியதாவது:

"வெளிநாட்டில் டூயட், நாயகனுடன் காதல் என்றெல்லாம் நடிப்பதற்கு பல பேர் இருக்கிறார்களே. நானும் அதை பண்ண வேண்டுமா. என்னைப் பொறுத்தவரை கதை தான் ஹீரோ. கதாநாயகி என்று அழைப்பதை விட, கதையின் நாயகி என்று அழைப்பதை விரும்புபவள் நான். கதை நன்றாக இருந்தால் போதும், என் கதாபாத்திரம் சிறிதாக இருந்தால் கூட தயக்கமின்றி நடிப்பேன். நான் நாயகியா, வில்லியா என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை"

இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

23 mins ago

சினிமா

59 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்