ஓடிடி தளத்தில் வெளியாகும் காட்டேரி

By செய்திப்பிரிவு

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள 'காட்டேரி' திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டிகே இயக்கத்தில் உருவான படம் 'காட்டேரி’. ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் வைபவ், ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், சோனம் பாஜ்வா ஆகியோருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் பணிகள் அனைத்துமே முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்தது. ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இந்தப் படம், திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால் ஊரடங்கு முடிந்தவுடன் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது, யாரும் எதிர்பாராத விதமாக 'காட்டேரி' திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ள இந்தப் படம், ஓடிடி தளம் வாயிலாக வெளிக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்