விஷால் - மிஷ்கின் கூட்டணி மீண்டும் இணைவதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்தார்கள்.
லண்டனில் மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன் 2' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார் விஷால். தனது விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவும் செய்தார். நாயகியாக புதுமுகம் அஷ்யா, ரகுமான், கெளதமி, பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்கள்.
இந்தப் படப்பிடிப்பின் போது விஷால் - மிஷ்கின் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. மிஷ்கின் தொடர்பாக விஷால் விட்ட அறிக்கை மற்றும் விஷால் தொடர்பாக மிஷ்கினின் மேடைப் பேச்சு இரண்டுமே சர்ச்சையாக உருவெடுத்தது.
மேலும், 'துப்பறிவாளன் 2' படத்தின் மீதி காட்சிகளை தானே இயக்கி நடிக்கவுள்ளதாக விஷால் அறிவித்தார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார். இதனிடையே, சில நாட்களாக விஷால் - மிஷ்கின் கூட்டணி மீண்டும் இணைந்துவிட்டதாக தகவல் வெளியானது. இதனால் 'துப்பறிவாளன் 2' படத்தின் இயக்குநர் பொறுப்பை மீண்டும் மிஷ்கினே ஏற்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்கள்.
» காவல்துறையைப் பற்றி படமெடுத்ததில் வருத்தமில்லை: கெளதம் மேனன்
» தென்னிந்திய மொழி படங்கள் வெளியீடு எப்போது? - நெட்ஃப்ளிக்ஸ் விளக்கம்
இது தொடர்பாக விஷால் தரப்பில் விசாரித்த போது, "சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சரியான திட்டமிடல் இல்லாமல் தான் மிஷ்கினால் பல கோடி நஷ்டம். எனவே 'துப்பறிவாளன் 2' படத்தை இயக்க மிஷ்கினை அழைக்கும் எண்ணமில்லை. 'சக்ரா' படத்தின் சில நாட்கள் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு, 'துப்பறிவாளன் 2' படத்தை விஷாலே இயக்குவார்" என்று தெரிவித்தார்கள்.
நாயகனாக நடிப்பதற்கு முன்னதாக அர்ஜுனிடம் உதவி இயக்குநராக விஷால் பணிபுரிந்தவர். ஆகையால் 'துப்பறிவாளன் 2' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago