நான் கணிக்க முடியாதவள்; திருமணம் இப்போதைக்கு கிடையாது என்று ஓவியா தெரிவித்துள்ளார்.
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் ஓவியா. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு பட வாய்ப்புகள் வந்தாலும், சில படங்களை மட்டுமே ஒப்புக் கொண்டு நடித்தார். 'காஞ்சனா 3', 'களவாணி 2' உள்ளிட்ட சில படங்கள் அதில் அடங்கும்.
'பிக் பாஸ்' மூலம் அடைந்த புகழை, ஓவியா சரிவர உபயோகப்படுத்தவில்லை என்று பலர் கருத்து தெரிவித்தார்கள். ஆனால், எதைப் பற்றியும் கவலையின்றி தனது பொழுதை கழித்து வருகிறார் ஓவியா. அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிடுவார். அதற்குப் பிறகு தான் என்ன செய்கிறேன் உள்ளிட்ட எந்தவொரு தகவலையுமே ஓவியா வெளியிடுவதில்லை.
இதனிடையே, இந்த கரோனா ஊரடங்கில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் ஓவியா. அதில் சில கேள்விகளும் பதில்களும்:
» சர்ச்சையில் சிக்கியுள்ள பிதா
» சில படங்களில் நாயகனாக விளம்பரப்படுத்துதல்: யோகி பாபு வேதனை
கேள்வி: உங்களுக்குப் பிடித்த 'பிக் பாஸ்' போட்டியாளர்?
பதில்: ஓவியா
கேள்வி: உங்களுடைய அடுத்த படங்கள்?
பதில்: இரண்டு வெப் சீரியஸ்
கேள்வி: உங்களுக்கு காதலர் இருக்கிறாரா?
பதில்: இல்லை. நான் சிங்கிள்
கேள்வி: வாரிசு அரசியல் பற்றி உங்கள் கருத்து?
பதில்: அரசியல் அனைத்து இடத்திலும் உள்ளது.
கேள்வி: திரைத்துறையில் இல்லாவிட்டாலும் எப்படி உங்கள் ரசிகர்களைத் தக்க வைத்துக் கொள்வீர்கள்
பதில்: ரசிகர்களின் பெயரால் மக்களை முட்டாளாக்க நான் ஒன்றும் புகழ் விரும்பி இல்லை. நீங்கள் விரும்பினால் என்னை விரும்பலாம், வெறுக்க வேண்டும் என்றால் வெறுக்கலாம். அவ்வளவுதான்.
கேள்வி: இது ஒரு கடினமான சூழல் என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த தனிமைப்படுத்தலில் நாம் நம்முடைய மனநலத்தில் கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது குறித்து உங்களால் ஏதேனும் குறிப்பிட முடியுமா?
பதில்: நம்முடைய கஷ்டங்களை அடுத்தவரால் அதை அனுபவிக்கும் வரை புரிந்து கொள்ள இயலாது. இதை நீங்கள் தான் சமாளிக்க வேண்டும். யாரும் உங்களை வந்து காப்பாற்றப் போவதில்லை. இது உங்கள் வாழ்க்கை. அதற்காக நீங்கள் செய்யவிரும்புவதைச் செய்யுங்கள். அனைத்தும் உங்கள் கையில் தான் உள்ளது. உறுதியாக இருங்கள்.
கேள்வி: நீண்ட நாட்களாக எந்த ட்வீட்களும் போடவில்லையே ஓவியா? தற்போது போய்க் கொண்டிருக்கும் சமூக பிரச்சினைகளுக்கு உங்கள் குரலை எழுப்ப இயலுமா?
பதில்: இல்லை. உண்மையான குற்றவாளிகளை தண்டிக்கும் அதிகாரம் எனக்கு கிடைக்காமல் நிஜ வாழ்வில் நான் நடிக்க மாட்டேன்.
கேள்வி: அடுத்தது படமா அல்லது திருமணமா?
பதில்: திருமணம் செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை
கேள்வி: இப்போதெல்லாம் ட்விட்டரில் நீங்கள் தொடர்ச்சியாக இயங்குவதில்லையே...
பதில்: நான் கணிக்க முடியாதவள்.
முக்கிய செய்திகள்
சினிமா
50 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago