'ஹிட்டு குட்டி ஸ்டோரி மெட்டு'; தோனிக்காக உருவான  பிறந்த நாள் சிறப்புப் பாடல்: தொகுப்பாளினி பாவனா பகிர்வு

By மகராசன் மோகன்

கிரிக்கெட் வீரர் தோனிக்காக உருவாக்கிய பிறந்த நாள் சிறப்புப் பாடல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு பெற்று வருவதைப் பரவசத்துடன் பகிர்கிறார் தொகுப்பாளினி பாவனா.

தொலைக்காட்சி நிகழ்ச்சி, கிரிக்கெட் வர்ணனை என அசத்தி வரும் தொகுப்பாளினி பாவனா. இந்த ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்தபடியே சமீபத்தில் மாஸ் அப் ஆல்பம் ஒன்றை ரிலீஸ் செய்து வெளியிட்டார். இது பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் தற்போது கிரிக்கெட் வீரர் தோனியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ஒரு பாடலை உருவாக்கி பாராட்டுகளை அள்ளி வருகிறார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது :

"நம்ம தோனின்னா, பிடிக்காதவங்க யார்தான் இருக்க முடியும்? ஸ்டார் போர்ட்ஸ் தமிழ் சேனல் சார்பில் கடந்த 1 வாரமாகவே தோனியின் பிறந்த நாளைப் பல்வேறு விதமாகக் கொண்டாடி வந்தோம். இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் நேர்காணல் ஒன்றையும் எடுத்தேன். அந்த நேர்காணலில் தோனியின் சிறப்பு குறித்து அவர் நிறைய பகிர்ந்தார்.

இப்படி ஒரு சூழலில் நம்ம கிரிக்கெட் தல தோனிக்காக ஏதாவது இன்னும் ஸ்பெஷலாக ஒரு விஷயம் செய்யலாமே என சேனல் தரப்பில் விவாதித்தோம். அவரைப் பற்றி நிறைய விஷுவல் பார்த்திருப்போம், கதைகள் கேட்டிருப்போம். அதையும் கடந்து யோசிக்கும்போது பாட்டு என்றால் மக்களிடம் இன்னும் போய்ச்சேரும் என நினைத்தோம்.

அந்தப் பாட்டே ஒரு ஸ்டோரியாக இருந்தால் இன்னும் புதுமையாக இருக்கும் என நினைத்தேன். அந்த ஸ்டோரி ஏன் குட்டி ஸ்டோரியாக இருக்கக்கூடாது? என்ற கேள்வி வந்தபோதுதான் கிரிக்கெட் 'தல' தோனியையும், தளபதி விஜய்யையும் ஒன்றாக இணைத்து இந்த 'ஹிட்டு குட்டி ஸ்டோரி மெட்டு' பாட்டு உருவானது,

அனிருத் இசையில் பெரிய அளவில் ரீச் ஆன பாடல். அதுவும் இன்னும் படமும் ரிலீஸாகவில்லை. அனுமதி கிடைக்குமா என நினைத்தபோது, ' நம்ம தோனிக்காக இன்னும் நிறைய செய்யலாம்!' என அனிருத், சோனி மியூசிக் தரப்பில் உடனே அனுமது அளித்தனர். அவர்களுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நன்றி சொல்லலாம்.

மூன்றே நாட்களில் உருவான பாடல். இந்தப் பாடலின் பெரும்பகுதியை நானும் எங்கள் சேனலில் உள்ள நண்பர் கைலாஷும் எழுதினோம். இன்னும் சிலர் உதவியாக இருந்தனர். 'முழு பாடலையும் பாடிட்டே... நீ முகம் காட்டலன்னா இதை நீதான் பாடியிருப்பே!'ன்னு தெரியாமலேயே போய்டுமேன்னு ப்ரண்ட்ஸ் சொன்னாங்க. அந்தக் குறை எதுக்குன்னு பாடல்ல முகத்தையும் காட்டியாச்சு.

லாக்டவுன் நேரமாச்சே, வெளியிலே போகமுடியாது. அதனால என்னோட பிளாட்ல இருக்குற என் தோழி சம்யுக்தாவின் உதவியோட என்னோட காட்சிகளை வீட்லயே ஷூட் செய்தேன். ஆலன் ப்ரித்தம் என்ற நண்பர் இந்தக் குட்டி ஸ்டோரி பாட்டை சிறப்பாக மிக்ஸிங் செய்து கொடுத்தார். இப்படி எங்கள் கூட்டு முயற்சியில் சிறப்பாக வந்த இந்தப் பாடலை 24 மணி நேரத்துக்குள் 4 லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்கள் பார்த்திருக்காங்க. சொல்ல வார்த்தைகளே இல்லை.

தோனியோட பிறந்த நாளுக்கு ரசிகர்கள் அளித்த வாழ்த்துகளிலேயே பெரிய அளவில் அதுவும் சர்வதேச அளவில் ரீச் ஆன பாடலாக இது பெயர் வாங்கிக் கொடுத்திருக்கு. அதைவிட என்ன சந்தோஷம் வேண்டும்?".

இவ்வாறு பாவனா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

34 mins ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்