ஓடிடி தளத்தில் வெளியாகிறதா 'ஜகமே தந்திரம்'?

By செய்திப்பிரிவு

தனுஷ் நடிப்பில் உருவாகும் 'ஜகமே தந்திரம்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'அசுரன்' படம் வெளியாகும் முன்பே, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜகமே தந்திரம்' படத்தில் நடிக்கத் தொடங்கினார் தனுஷ். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்பட்டது. ராஜஸ்தான், மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் சில முக்கியக் காட்சிகளையும் படமாக்கியுள்ளது படக்குழு.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகப்போவதாகத் தகவல் வெளியானது.

இது தொடர்பாக விசாரித்தபோது, "தனுஷின் படங்கள் வரிசையில் இந்தப் படத்தின் பொருட்செலவு அதிகம். லண்டனிலேயே முக்கியமான காட்சிகளை ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவுடன் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். ஆகையால், இந்தப் படம் திரையரங்கில் வெளியானால் மட்டுமே சரியாக இருக்கும். ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு வாய்ப்புகள் குறைவு" என்று படக்குழுவினருக்கு நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் தனுஷுடன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் 'ஜகமே தந்திரம்' படத்தைத் தயாரித்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

சினிமா

31 mins ago

சினிமா

39 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்