ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு நடிக்கும் படத்துக்கு 'முருங்கைகாய் சிப்ஸ்' என்று பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
'மாஸ்டர்', 'ராவணக் கோட்டம்' படங்களை அதிகம் எதிர்பார்க்கிறார் சாந்தனு. 'மாஸ்டர்' படத்தில் விஜய்யுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
'ராவணக் கோட்டம்' படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கப்படவுள்ளது. மேலும், இந்தக் கரோனா ஊரடங்கு சமயத்தில் தனது யூடியூப் பக்கத்தில் குறும்படம், பாக்யராஜ் பேட்டி என்று வெளியிட்டு வரவேற்பைப் பெற்றார் சாந்தனு.
இந்தப் படங்களைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கவுள்ள படத்தில் ஒப்பந்தமானார் சாந்தனு. இதில் அதுல்யா, மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும், இதில் பாக்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது இந்தப் படத்துக்கு 'முருங்கைகாய் சிப்ஸ்' என்று தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இன்று (ஜூலை 8) தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்குப் பிறந்த நாள். அதை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
புதுமணத் தம்பதியரின் முதல் இரவில் நடைபெறும் பாரம்பரிய நிகழ்வுகளை நகைச்சுவையாக விரசமில்லாமல் திரைக்கதையாக அமைத்துள்ளார் ஸ்ரீஜர். ரவீந்தர் சந்திரசேகர், சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.
ஒளிப்பதிவாளராக ரமேஷ் சக்ரவர்த்தி, எடிட்டராக ஜோமின் மேத்யூ, கலை இயக்குநராக நர்மதா வேணி, இசையமைப்பாளராக தரண் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
44 mins ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago