பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் ‘வினோதன்’ படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகிக்கொண்டிருக்கிறார் வேதிகா. ‘‘என்னை ‘காவியத்தலைவன்’ படத்துக்குப் பிறகு ரொம்பவே ஈர்த்த கதைக்களம் என்பதால் எந்த யோசனையும் இல்லாமல் உடனே சம்மதித்தேன்..’’ பளிங்குக் கண்கள் மின்ன பேசத் தொடங்குகிறார் வேதிகா.
அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி எடுத்துக்கொள்கிறீர்கள்?
தமிழில் வெளியான ‘பரதேசி’, ‘காவியத்தலைவன்’ படங்களில் என் கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் பெற்றது. அப்படியான படங்களில் நடித்துவிட்டு, வாய்ப்பு கிடைக்கிறதே என்பதற்காக எல்லா படங்களிலும் நடிக்க முடியுமா? ‘வினோதன்’ படத்தின் கதை மிகவும் கவர்ந்ததால் ஒப்புக்கொண்டேன். இளமைத் துடிப்புடன் கூடிய கதைக்களம். என்னை இதற்கு முன்பு இப்படி ஒரு கேரக்டரில் பார்த்திருக்க முடியாது.
தமிழில் வெளியான ‘பரதேசி’, ‘காவியத்தலைவன்’ படங்களில் என் கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் பெற்றது. அப்படியான படங்களில் நடித்துவிட்டு, வாய்ப்பு கிடைக்கிறதே என்பதற்காக எல்லா படங்களிலும் நடிக்க முடியுமா? ‘வினோதன்’ படத்தின் கதை மிகவும் கவர்ந்ததால் ஒப்புக்கொண்டேன். இளமைத் துடிப்புடன் கூடிய கதைக்களம். என்னை இதற்கு முன்பு இப்படி ஒரு கேரக்டரில் பார்த்திருக்க முடியாது.
பாலா, வசந்தபாலன் என்று முன்னணி இயக்குநர்களின் கதைகளில் முகம் காட்டிய நீங்கள் திடீரென புது இயக்குநர், புது நடிகர் என்று தேர்வு செய்ய என்ன காரணம்?
இந்த படத்தை தேர்வு செய்ய கதை எந்த அளவு காரணமோ, அதே அளவுக்கு இந்த படத்தோட டீமும் ஒரு காரணம். பிரபுதேவா தயாரிப்பில் வருகிற முதல் படம். அவர் எவ்வளவு திறமைசாலி என்பது நம் எல்லோருக்குமே தெரியும். அவர் தயாரிப்பில் இறங்கும் படம் என்றால் மேக்கிங் எல்லாம் சொல்லவே வேண்டாம். இயக்குநர் விக்டர் ஜெயராஜ். ஏ.எல்.விஜய் உதவியாளர். இசையமைப்பாளர் டி.இமான், புதுமுக நாயகன் வருண். அவர் பல திறமைகள் கொண்டவர். வசனம் மதன் கார்க்கி. இப்படி படத்தில் இருக்கிற எல்லோருமே திறமையானவர்கள். அவர்களோடு இதில் என் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
கன்னடத்தில் நீங்கள் நடித்துவரும் ‘சிவலிங்கா’ திரைப்படம் எந்த நிலையில் உள்ளது?
பி.வாசு சார் படம். சிவராஜ்குமார் ஹீரோ. படம் நிறைவடையும் வேலைகள் நடந்துவருகிறது. நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களம். ‘பரதேசி’ - ‘காவியத்தலைவன்’ எப்படி ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்ததோ, அதேபோல, இந்த படத்திலும் என் வித்தியாசமான தோற்றம் பாராட்டை பெறும். மலையாளத்தில் சுஜித் வாசுதேவ் இயக்கத்தில் பிருத்விராஜுடன் நடித்துவரும் ‘ஜேம்ஸ் அண்ட் அலிஸ்’ டைட்டில் ரோல். இந்த படத்தில் நடிப்புக்கு அவ்வளவு வேலை இருக்கிறது. இப்படி படங்கள் அமைந்தால்தான் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய முடியும் என்பது என் நம்பிக்கை. தரமான படங்கள்தான் என் இலக்கு.
ஒரே நேரத்தில் வெவ்வேறு மொழிப் படங்களில் நடிக்கிறீர்கள். இந்த அனுபவம் எப்படி உள்ளது?
நடிப்பையும், மொழியையும் தொடர்புபடுத்த தேவையில்லை. மொழியைக் கடந்தது நடிப்பு. மொழியின் முக்கியத்துவம் நடிப்புக்கு அந்த அளவு தேவைப்படுவதில்லை. ஒரு நேரத்தில் வெவ்வேறு களத்தில் நடிப்பது சிரமமாகத் தெரியவில்லை. ஒரே ஒரு விஷயம், ஒவ்வொரு படத்துக்கும் கதை மட்டுமின்றி, உடன் பணியாற்றுகிற டீமும் நல்லதாக அமைய வேண்டும். அப்படி நல்ல கலைஞர்கள் அமைந்துவிட்டால் நல்ல பெயர் தானாக கிடைத்துவிடும்!
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago