இணையத்தில் வைரலான சஹானாவின் பாடலைத் தொடர்ந்து, 'கோப்ரா' படக்குழுவினர் அவருக்குப் பரிசளித்துள்ளனர்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'கோப்ரா'. லலித்குமார் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்திலிருந்து சில தினங்களுக்கு முன்பு 'தும்பி துள்ளல்' என்ற பாடல் வெளியிடப்பட்டது.
இணையத்தில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சுமார் 3 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதனிடையே, இந்தப் பாடலின் இசையை தனது கீ-போர்டில் வாசித்துப் பதிவேற்றினார் சஹானா.
ஜீ தமிழ் சேனலில் சரிகமபா நிகழ்ச்சியில் 2-வதாக வந்தவர்தான் சஹானா. இவர் கண் பார்வையற்ற சிறுமி. 'தும்பி துள்ளல்' பாடலை இவர் வாசித்துப் பதிவேற்றிய சில மணித்துளிகளில் பெரும் வைரலாகப் பரவியது. இவருடைய ட்விட்டர் தளத்தில் வெளியான ட்வீட்டைக் குறிப்பிட்டு 'ஸ்வீட்' என்று தனது வாழ்த்தைத் தெரிவித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
» ’சட்டம்’, ‘நீதி’, ‘சாட்சி’யைக் களமாக்கிய இயக்குநர்! - எஸ்.ஏ.சந்திரசேகர் பிறந்தநாள் இன்று
தற்போது 'கோப்ரா' படத்தின் தயாரிப்பாளரான லலித்குமார் சிறுமி சஹானாவிற்கு விலை உயர்ந்த மைக் உள்ளிட்ட ஸ்டுடியோ செட்டப் ஒன்றைப் பரிசாகக் கொடுத்துள்ளார். இதற்கு சஹானா தரப்பில் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago