ஜீ தமிழ் சேனல் தொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு இன்று பிறந்த நாள். ''பொதுவாகவே டிவி நிகழ்ச்சிகளில் 'துறுதுறு பரபர'வென வெடித்துத் தீர்க்கும் நீங்க இந்த 'லாக்டவுன்' நேரத்தில் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடப் போறீங்க?' என்ற கேள்வியோடு வாழ்த்தையும் தெரிவித்தோம்.
''எப்பவுமே பிறந்த நாளன்னைக்கு வெளியில போகற பழக்கம் எனக்கு இல்லை. முழுக்க குடும்பத்தோடுதான் இந்த வருஷமும். தன்னோட நெருக்கான ப்ரண்ட்ஸுக்கு பிறந்த நாள்னா, என் மகள் சாரா, அவளே கேக் தயாரிக்க ஆரம்பிச்சிடுவா? இன்னைக்கு அம்மாவோட 'பர்த் - டே'வாச்சே. விடுவாளா?
எனக்குப் பிடிச்ச வெண்ணிலா சாக்லேட் காம்பினேஷன் அல்லது ரெட் வெல்வெட் கேக் இதுங்க ரெண்டுல ஏதோ ஒரு கேக் ரெடி பண்ணியிருக்கா. 'ஈவ்னிங் வரைக்கும் அது சர்ப்ரைஸ்மா..!'ன்னும் சொல்லிட்டா?!.
டிவி நிகழ்ச்சிகளைத் தவிர, என்னோட இந்த 38 வயசுல என்னோட விருப்பத்துக்காக கொலுசு போட்டுக்கிற சந்தர்ப்பம் அமையவே இல்லை. சின்ன வயசுல இருந்தே எனக்கு கொலுசுன்னா அவ்ளோ உயிர். எப்படியாவது என்னோட கணவர்கிட்டே சொல்லி இந்த பர்த்டே-வுக்கு கொலுசு வாங்கி அணியனும்னு இருந்தேன். அந்தக் கனவும் இந்த ஊரடங்கால கரைஞ்சு போச்சு. கணவர் கடற்படை அதிகாரியா இருப்பதால அவருக்கு ஒருநாள் கூட விடுமுறை இல்லை.
இந்த முறை அடம்பிடித்து அழுது விடுமுறை வாங்கியிருக்கேன். அதுதான் எனக்கு இப்போ மிகப் பெரிய சந்தோஷம். அதோடு... என் அம்மா, தங்கை, அவளோட கணவர் என மொத்தக் குடும்பமும் இன்னைக்கு வீட்ல இருக்கோம். அதுவே ரொம்ப சந்தோஷம்.
எல்லாத்தோட ஸ்பெஷலா எப்பவுமே என்னோட குடும்ப நபர்களாக பார்க்குற என்னோட ரசிகர்களை, இன்ஸ்டாகிராம் வழியாவும், 'Wow Life' - யூடியூப் சேனல் வழியாவும் மாலை 5.30 மணிக்கு நேரலையில் இணையப்போறேன். இவ்ளோ சந்தோஷமும் இன்றைய ஸ்பெஷல்தான்!'' என்று கலகலப்பாக முடிக்கிறார், தொகுப்பாளினி அர்ச்சனா.
முக்கிய செய்திகள்
சினிமா
31 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago