விஜய்க்கு கலாட்டாவான இன்னொரு முகம் இருக்கிறது: மாளவிகா மோகனன்

By செய்திப்பிரிவு

விஜய்க்கு கலாட்டாவான இன்னொரு முகம் இருக்கிறது என்று நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. 'பேட்ட' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா மோகனன், 'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு நாயகியாக நடித்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லையென்றால், இந்தப் படம் வெளியாகி இருக்கும். தற்போது திரையரங்கத் திறப்புக்காக படக்குழு காத்திருக்கிறது.

'மாஸ்டர்' படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பது குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் மாளவிகா மோகனன் கூறியிருப்பதாவது:

"விஜய் வசீகரமானவர். உடன் பணியாற்ற எளிதானவர். அவருக்கு இவ்வளவு பிரம்மாண்ட ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது படப்பிடிப்பில் எனக்குத் தோன்றவே இல்லை. அதுதான் அவரது தனித்துவம். அந்த பிம்பத்தை படப்பிடிப்பில் கொண்டு வரவே மாட்டார். மிகவும் உதவிகரமாக இருந்தார்.

என்னால் அவரிடம் வெளிப்படையாக பேச முடியாதோ என்று எனக்குத் தோன்றவேயில்லை. அந்த அளவுக்கு அவருடன் நடித்தது எளிதாக இருந்தது. நீங்கள் பேச வேண்டாம் என்று அமைதி காக்கும் அளவுக்கு துறையில் சிலரால் நடந்து கொள்ள முடியும். ஆனால் விஜய் அப்படி நடந்துகொள்ளவே இல்லை. 'மாஸ்டர்' படப்பிடிப்பு எனக்குச் சிறப்பான அனுபவமாக இருந்தது. விஜய்க்கு கலாட்டாவான இன்னொரு முகம் இருக்கிறது. நாங்கள் எல்லோரும் அதைப் பார்த்து ரசித்திருக்கிறோம்"

இவ்வாறு மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்