விஜய் சேதுபதியின் பழைய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது தமிழில் விஜய்யுடன் 'மாஸ்டர்', 'கடைசி விவசாயி', 'க/பெ ரணசிங்கம்', 'மாமனிதன்' மற்றும் தெலுங்கில் 'உபெனா' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் விஜய் சேதுபதி.
மேலும், 'லாபம்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'துக்ளக் தர்பார்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இதன் பணிகள் கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளன.
அவ்வப்போது விஜய் சேதுபதி பேசிய வீடியோக்கள், கருத்துகள் என இணையத்தில் வைரலாகி வரும். அந்த வரிசையில் இப்போது அவருடைய பழைய போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. பலருமே இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களை வைத்து, கமல் நடித்த 'சத்யா' படத்தின் ரீமேக்கில் நடிக்கப் பொருத்தமாக இருப்பார் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
» ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணம்: தனிப்பட்டவர்கள் தவறா? அமைப்பின் தவறா?- நடிகர் கார்த்தி கேள்வி
» ’மல... அண்ணாமல’ ; 28 வருடங்கள் கழித்தும் மலையுச்சியில் நிற்கிறான் ‘அண்ணாமலை’!
ஏனென்றால், 'சத்யா' கமல் கெட்டப் போலவே இந்த போட்டோ ஷூட்டில் இருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த கரோனா ஊரடங்கில் கூட கமல் - விஜய் சேதுபதி கலந்துரையாடலுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், கமல் இயக்கி நடிக்கவுள்ள 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இணையத்தில் வைரலான விஜய் சேதுபதியின் பழைய போட்டோ ஷூட் ஆல்பம்: CLICK HERE
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
சினிமா
18 mins ago
சினிமா
39 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago