மின்னலே இரண்டாம் பாகத்தில் நடிப்பது குறித்த தகவல்களுக்கு நடிகர் மாதவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் மாதவன், ரீமா சென், அப்பாஸ் நடித்த படம் ‘மின்னலே’. 2000 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைப்பில் பாடல்களும் சூப்பர் ஹிட். இப்படம் இந்தியில் ‘ரெஹ்னா ஹே தேரே தில் மெய்ன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதையும் கௌதம் மேனனே இயக்கியிருந்தார். இதில் மாதவன், தியா மிர்சா, சைஃப் அலி கான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதுகுறித்து ரசிகர்கள் பலரும் மாதவனின் ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பிவந்தனர்.
இந்நிலையில் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
» புகழ்புற்ற ஜப்பானிய நாவலை திரைப்படமாக்கும் ‘டெட்பூல் 2’ இயக்குநர்
» மீண்டும் தள்ளிப்போன ‘டெனெட்’ ரிலீஸ் தேதி - வார்னர் ப்ரதர்ஸ் அறிவிப்பு
'' ‘ரெஹ்னா ஹே தேரே தில் மெய்ன்’ இரண்டாம் பாகம் குறித்த வதந்திகளைப் படிக்க நேர்ந்தது. அது உண்மையாக விரும்புகிறேன். மேலும், அதுகுறித்த எந்தத் தகவலும் எனக்குத் தெரியாது. அந்த கதைக்கேற்ற வயது கொண்டவர்கள் யாராவது நடிக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். மேலும், இந்த வயதில் நானும் தியாவும் இந்தக் கதையில் நடித்தால் யானைக்கு கால்சட்டை அணிந்தது போல இருக்கும்''.
இவ்வாறு மாதவன் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago