விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'சக்ரா' திரைப்படம் 4 மொழிகளில் வெளியாவது உறுதியாகியுள்ளது.
புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சக்ரா'. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மட்டும் சில நாட்கள் பாக்கியுள்ளது. மற்ற அனைத்துப் பணிகளுமே முடிந்துவிட்டன. கரோனா அச்சுறுத்தல் முடிந்து, திரையரங்குகள் திறந்தவுடன் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஷால் படங்கள் என்றாலே, தமிழ் மற்றும் தெலுங்கில்தான் வெளியாகும். ஆனால், 'சக்ரா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகியுள்ளது. ஜூன் 27-ம் தேதி 4 மொழிகளிலுமே 'சக்ரா' ட்ரெய்லர் வெளியிடப்படவுள்ளது.
தமிழ் ட்ரெய்லரை கார்த்தி மற்றும் ஆர்யாவும், தெலுங்கு ட்ரெய்லரை ராணாவும், மலையாள ட்ரெய்லரை மோகன்லாலும், கன்னட ட்ரெய்லரை யாஷும் வெளியிடவுள்ளனர். இந்தப் படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.
» கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிறதா 'அறம் 2'?
» சுஷாந்தின் உடல் எடுத்துச் செல்லப்படும் வீடியோ: புகைப்படக் கலைஞரைச் சாடிய தீபிகா படுகோன்
இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago