’’இளையராஜாவுக்கும் எனக்கும் என்ன பிரச்சினைன்னா..’’ - மனம் திறக்கிறார் பாக்யராஜ்

By வி. ராம்ஜி

’டேட் சன் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜை, அவரின் மகன் சாந்தனு பேட்டி எடுத்தார்.

அந்தப் பேட்டியில் சாந்தனு கேட்ட கேள்விகளும் பாக்யராஜ் அளித்த பதில்களும் :

‘‘அப்பாகிட்ட கேள்வி ஏதாவது இருந்தா அனுப்புங்கன்னு டிவிட்டர் போட்டேன். அதுல நிறைய பேர் கேள்விகள் அனுப்பிச்சிருக்காங்க. அந்தக் கேள்விகளைத்தான் இப்போ கேக்கப் போறேன்’ என்றார் சாந்தனு.

’’அடுத்த கேள்விப்பா. ‘சின்ன வீடு’ படத்துக்குப் பிறகு ‘ராசுக்குட்டி’யில்தான் இளையராஜாவுடன் இணைந்து பணிபுரிந்தீர்கள்? ஏழு வருட இடைவெளி ஏன்?’’

’’சண்டைதான். சில நேரங்கள்ல, ஈகோன்னு கூட சொல்லலாம். பிரஸ்டீஜ் மேட்டர்னு கூட எடுத்துக்கலாம். அப்பலாம், ‘அடுத்த படத்துக்கு சப்ஜெக்ட் ரெடின்னு சொல்லுவேன். நாலு நாள் கழிச்சு உக்காரலாம்னு சொல்லுவார். விஜிபில உக்காரலாம்னு சொல்லுவார். சேலத்துக்குப் போலாம்னு சொல்லுவார். நம்ம தோட்டத்துக்குக் கூட வந்திருக்கார், பவானில!

அடுத்த படம் பண்ணும்போது கொஞ்சம் முன்கூட்டியே சொல்லுங்க. ஒரு பத்துநாள் முன்னாடியே சொல்லுங்க. கொஞ்சம் பீஸ்ஃபுல்லா போய் உக்காரலாம்னு இளையராஜா சொல்லிருந்தாரு. சரிங்கன்னு சொன்னேன்.

அப்புறம், படத்துக்கு கதையெல்லாம் ரெடி பண்ணிட்டேன். போய் சொல்லிடலாம்னு போனேன். அப்ப அவரோட உதவியாளர்கிட்ட, ‘ரெடியா இருக்கேன். எப்போ சொல்றாரோ போகலாம்னு சொன்னேன்னு சொல்லிருங்க’ன்னு சொல்லிட்டு வந்தேன். அப்புறமா, அந்த உதவியாளர், ‘சாரை எதுக்கும் வீட்ல போய் பாத்துருங்களேன்’னு சொன்னாரு.

’வீட்ல எதுக்குங்க போய் பாக்கணும்? எப்பவும் ஸ்டூடியோலதானே பாப்பேன்’ன்னு சொன்னேன். ‘உடம்பு சரியில்லேன்னா சொல்லுங்க. வீட்ல போய் பாக்கறேன். சும்மா கமிட்மெண்ட்டுக்காக இப்படி சொல்லாதீங்க’ன்னு சொன்னேன். கொஞ்சம் ஒருமாதிரியா இருந்துச்சு. இதை ஈகோன்னு எடுத்துக்கிட்டாலும் சரி... பிரஸ்டீஜ்னு எடுத்துக்கிட்டாலும் சரி. அப்புறமும் ‘எல்லாரும் பாக்கறாங்க, எல்லாரும் பாக்கறாங்க’ன்னு திரும்பத் திரும்ப அவர் சொன்னாரு. நான் கோச்சுக்கிட்டு வந்துட்டேன். எப்படி இருந்தாலும் ராஜா கூப்பிடுவாருன்னு நினைச்சேன்.

அப்புறம் அவர் ராஜாகிட்ட என்ன சொன்னாருன்னு தெரியல... ராஜா என்னைக் கூப்பிடவே இல்ல. ஆனா ராஜா கூப்பிடலைங்கற விஷயம், மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. ராஜா, நம்மளைக் கூப்பிட்டு என்ன நடந்துச்சுன்னு ஒருவார்த்தை கேட்டிருக்கலாம், கேக்கவே இல்லைன்னு வருத்தப்பட்டேன்’’ என்று தெரிவித்தார் பாக்யராஜ்.

‘’அடுத்த கேள்வி... உங்க அப்பா உங்களை நினைச்சு எப்போ பெருமைப்பட்டிருக்கார்னு கேளுங்க. எந்த அப்பாவும் தன் பையன்கிட்ட இதைச் சொல்லமாட்டாங்க?ன்னு ஒருத்தர் கேட்டிருக்கார்’’

’’ நீ சின்னப் பையனா இருக்கும்போது, ‘வேட்டிய மடிச்சுக்கட்டு’ படத்துல நடிக்கறதுக்கு, ‘என்ன, நடிக்கிறியா?’ன்னு கேட்டதும், உடனே எந்தத் தயக்கமும் இல்லாம, ‘ஓகே’ன்னு சொன்னே பாரு... அது ஆக்டிங், ஆக்டிவிட்டீஸ்னு செயல்ல துடிப்பா இருந்தே பாரு... பெருமையா இருந்துச்சு.

’தசாவதாரம்’ படத்துல கமல் சார், ‘பல்ராம் நாயுடு’ கேரக்டர் பேசிருப்பாரே... நீ அதேமாதிரி பேசுனதைப் பாத்துட்டு, ஆச்சரியமா இருந்துச்சு.

முக்கியமா, நீ டான்ஸ் ஆடுனது. இவன் எங்கே கத்துக்கிட்டான்,எப்படிக் கத்துக்கிட்டான். நமக்கும் டான்ஸுக்கும் சம்பந்தமே இல்லியே... இவன் பிரமாதமா ஆடுறானேன்னு நினைச்சு பெருமையா இருந்துச்சு. அப்புறம்தான் அம்மாகிட்ட சொன்னேன். முறைப்படி டான்ஸ் கத்துக்கிட்டா நல்லாருக்கும்னு சொல்லி, சேரச் சொன்னேன். நீ டான்ஸ் கத்துக்கப்போனே. குருதட்சணைலாம் கொடுத்தே. அப்படியே கீர்த்தியையும் ஃபிக்ஸ் பண்ணிட்டே.

எனக்கு ரொம்பநாளா தெரியாம, ரகசியமாவே இருந்துச்சு. உங்க அம்மா ஒருநாள், மெல்ல விஷயத்தைச் சொன்னாங்க. ’நம்ம சோனு லவ் பண்றான்’னு சொன்னாங்க. ‘என்னது லவ்வா?’ன்னு ஆச்சரியமா இருந்துச்சு எனக்கு. யாருன்னு கேட்டேன். மாஸ்டரோட பொண்ணு கீர்த்தின்னு சொன்னாங்க. நான் நிறைய புரோகிராம்ல கீர்த்தியைப் பாத்திருக்கேன். ‘பரவாயில்லியே... நல்லா பேசுறாங்களே’னு நினைச்சிருக்கேன்.

அப்புறம் டான்ஸ் க்ளாஸ் போவும் போது பழக்கம். லவ்வுன்னெல்லாம் சொன்னாங்க. ஓகே பண்ணியாச்சு’’ என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார் பாக்யராஜ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்