வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'டேனி' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் ஆகின்றன. 'வால்டர்' மற்றும் 'அசுரகுரு' ஆகிய படங்களுக்குப் பிறகு எந்தவொரு படமும் திரையரங்கில் வெளியாகவில்லை. திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருக்கிறார்கள்.
இதனால், தயாராகி இருக்கும் படங்கள் பலவும் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் தமிழ்த் திரையுலகிலிருந்து முதலாவதாக ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்த 'பெண்குயின்' வெளியானது.
இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து, பி.ஜி.முத்தையா தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள 'டேனி' படமும் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை ஜீ5 கைப்பற்றியுள்ளது. விரைவில் இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
» கரோனா ஊரடங்கில் காதலியைக் கரம்பிடித்த அஸ்வின்
» தேவையற்ற நக்கல், நையாண்டி, ஆபாசப் பேச்சுகளை ஏற்கமாட்டேன்: மாளவிகா மோகனன்
சந்தானமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'டேனி' படத்தில் வரலட்சுமி சரத்குமார், சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ஒரு நாயும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago