விஜய்க்கு கீர்த்தியின் வித்தியாசமான பிறந்த நாள் வாழ்த்து: வைரலாகும் வீடியோ

By செய்திப்பிரிவு

தனது வயலின் வாசிப்புத் திறமையின் மூலம் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் விஜய். இன்று (ஜூன் 22) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். கரோனா அச்சுறுத்தலால் பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் சமூக வலைதளத்தில் பிரத்யேகமாக போஸ்டர் வடிவமைப்புகளை வெளியிட்டு விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதில் விஜய்யுடன் 'பைரவா' மற்றும் 'சர்கார்' ஆகிய இரண்டு படங்களிலும் நாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோவுக்கு தற்போது ட்விட்டர் தளத்தில் உள்ள பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ஏனென்றால், விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'குட்டி ஸ்டோரி' பாடல் மிகவும் பிரபலம். அந்தப் பாடலின் ஒரு பகுதியை வயலினில் வாசித்து, விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் 'பெண்குயின்' படத்துக்காக அளித்த பேட்டியில் கூட "கரோனா ஊரடங்கில் வயலின் கற்று வருகிறேன்" என்று தெரிவித்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.

தனது ட்விட்டர் தளத்தில் 1 நிமிடம் 22 விநாடிகள் கொண்ட வயலின் வாசிப்பு வீடியோவைப் பதிவேற்றி "லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா.. ஆல்வேஸ் பி ஹேப்பி. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய் சார். உங்களுடைய பிறந்த நாளுக்கு எனது சிறிய பரிசு" என்று பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

பலரும் கீர்த்தி சுரேஷின் வயலின் வாசிப்புக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்