தனது கலைப்பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக தவிர்த்த ஓர் விதை விஜய் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் விஜய். இன்று (ஜூன் 22) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். கரோனா அச்சுறுத்தலால் பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் சமூக வலைதளத்தில் பிரத்யேகமாக போஸ்டர் வடிவமைப்புகளை வெளியிட்டு விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
"என் கலைப்பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை. இன்று வலிகளை வலிமையாக்கி தமிழகத்தின், இளைஞர்களின் சொத்தாக, உலகமே கொண்டாடப்படும் விஜய்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். காதலாகட்டும், நடுத்தர குடும்பக் கதாபாத்திரமாகட்டும் நையாண்டி, நக்கலுக்கான அந்த உடல் பாவனை, நடனத்தின் நளினம், சண்டைக் காட்சிகள், அதிலும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை உலகம் முழுவதும் ஈர்த்து வைத்திருக்கின்ற வெற்றியின் V என்ற முதல் எழுத்தாகக் கொண்ட விஜய்க்கு 46-வது பிறந்த நாளில், எல்லா சிறப்பும் பெற்று, நீடூழி வாழப் பாசத்துடன் வாழ்த்துகிறேன்".
இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago