'மாஸ்டர்' மறக்க முடியாத நினைவு: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

By செய்திப்பிரிவு

'மாஸ்டர்' கண்டிப்பாக ஒரு மறக்க முடியாத நினைவு என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் விஜய். இன்று (ஜூன் 22) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தற்போது 'மாஸ்டர்' படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர்.

விஜய் பிறந்த நாளை முன்னிட்டு 'மாஸ்டர்' படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும், விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"மாஸ்டர் கண்டிப்பாக ஒரு மறக்க முடியாத நினைவுதான். அதில் ஒரே ஒரு நாளை என்னால் தேர்ந்தெடுக்க முடியாது. உங்களுடன் செலவிட்ட ஒவ்வொரு தருணத்தையும் நினைத்து சந்தோஷப்படுவேன் அண்ணா. இதைச் சாத்தியமாக்கியதற்கு நன்றி. பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய் அண்ணா. லவ் யூ".

இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

'மாஸ்டர்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த இந்தப் படம் கரோனா அச்சுறுத்தலால் இன்னும் வெளியாகவில்லை. கரோனா அச்சுறுத்தல் அனைத்துமே முடிவுக்கு வந்தவுடன்தான் படத்தின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்வார்கள் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்