சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள 'சூரரைப் போற்று' படம், இந்தியிலும் ரீமேக்காகவுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படம் உருவாகியுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் வெளியாகாமல் உள்ளது.
'சூரரைப் போற்று' படத்தின் தணிக்கைப் பணி முடிந்துவிட்டது. எந்தவொரு காட்சியையும் கட் பண்ணச் சொல்லாமல் 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர் தணிக்கை அதிகாரிகள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் அபர்ணா, மோகன் பாபு, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.
இன்னும் வெளியாகாத இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இதில் ஷாகித் கபூர் நாயகனாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்தி ரீமேக்கை சுதா கொங்கராவே இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் எனத் தெரிகிறது.
» பிராட் பிட்டைப் பிரிந்ததற்கான காரணம்: மனம் திறந்த ஏஞ்சலினா ஜோலி
» ஏழு முறை நிராகரிக்கப்பட்ட பிறகு உருவான ‘சக் தே இந்தியா’ பாடல்: இசையமைப்பாளர் சலீம் பகிர்வு
'சூரரைப் போற்று' படத்தின் டீஸர் மற்றும் காட்சியமைப்புகள் உள்ளிட்டவற்றை வைத்தே ஷாகித் கபூர், இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் ஆர்வம் காட்டியதாகத் தெரிகிறது. மேலும், 'அர்ஜுன் ரெட்டி' தெலுங்குப் படத்தின் இந்தி ரீமேக்கான 'கபீர் சிங்' படத்தில் நாயகனாக நடித்திருந்தார் ஷாகித் கபூர். அந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து தற்போது 'ஜெர்ஸி' படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக 'சூரரைப் போற்று' படத்தில் ஷாகித் கபூர் நடிப்பார் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
41 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago