திருமணம் - விவாகரத்து பற்றி பேச எதுவும் இல்லை: சின்னத்திரை நடிகை மேக்னா வின்சென்ட் விளக்கம்

By செய்திப்பிரிவு

பிரபல சின்னத்திரை நடிகை மேக்னா வின்சென்ட் முடிந்து போன தனது திருமண வாழ்க்கை குறித்துப் பேச எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல சின்னத்திரை தொடர்களில் மேக்னா நடித்து வருகிறார். தமிழில் 'பொன்மகள் வந்தாள்', 'தெய்வம் தந்த வீடு' உள்ளிட்ட தொடர்கள் இவரைப் பிரபலப்படுத்தின. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், டான் டோனி என்கிற தொழிலதிபரை திருச்சூரில் மேக்னா மணந்தார்.

ஆனால் 2019-ம் ஆண்டு இவர்களுக்கு விவாகரத்தானதாகக் கூறப்பட்டது. மேக்னா இது பற்றி பேசாத நிலையில், டோனியின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் இந்த செய்தியை உறுதி செய்தன. தற்போது மேக்னா தனது யூடியூப் சேனலில் தனது திருமண வாழ்க்கை குறித்துப் பேசியுள்ளார்.

"பலர் எனது விவாகரத்து குறித்து என்னிடம் கேட்டுள்ளனர். அது முடிந்துவிட்டது. கடந்த கால விஷயங்களைப் பற்றிப் பேசுவதில் பிரயோஜனமில்லை தானே? உங்கள் விவாகரத்து பற்றி பல விதமாகப் பேசி வருகின்றனர். நீங்கள் ஏன் அதற்குப் பதில் கூறவில்லை என்றும் பலர் கேட்கின்றனர்.

நான் ஏன் அவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்? எனது எந்த பேட்டிகளிலும் என் விவாகரத்து குறித்து ஒரு வார்த்தை கூட நான் பேசவில்லை. கடந்த காலத்தில் நடந்த விஷயங்களை நினைத்து உணர்ச்சிவசப்படத் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்" என்று மேக்னா பேசியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

சினிமா

29 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்