நடிகராவதற்கு முன் நடனக் கலைஞராக இருந்ததாக கிருஷ்ணா புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
'அஞ்சலி' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கிருஷ்ணா. அதனைத் தொடர்ந்து 'அலிபாபா' படத்தின் மூலமாக நாயகனாகவும் அறிமுகமானார். இவர் தயாரிப்பாளர் சேகரின் மகன். இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பி ஆவார்.
'கழுகு', 'யாமிருக்க பயமேன்', 'வானவராயன் வல்லவராயன்', 'பண்டிகை' உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார் கிருஷ்ணா. தற்போது நடிகராக ஆவதற்கு முன்பு நடனக் குழுவில் நடனமாடி சம்பாதித்தாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார் கிருஷ்ணா.
இது தொடர்பாக கிருஷ்ணா தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
» மீம் கிரியேட்டர்களுக்கு விவேக் வேண்டுகோள்
» விரைவில் ‘க்ளாடியேட்டர்’ இரண்டாம் பாகம்? - ரிட்லி ஸ்காட் முயற்சி
"குழுவில் நடனமாடி சம்பாதித்த நாட்களின் எனது இந்தப் புகைப்படம் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்கு எனக்கு ரூ.1500 கிடைத்தது எனக்கு நினைவில் உள்ளது. பல நட்சத்திரக் கலை விழாக்களில் நான் குழுவில் ஒரு நடனக் கலைஞராக ஆடியுள்ளேன். விரைவில் அந்தப் புகைப்படங்களைப் பகிர்கிறேன்"
இவ்வாறு கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
30 mins ago
சினிமா
42 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago