விஷ்ணுவர்தன் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் நடித்த 'பில்லா' மற்றும் 'ஆரம்பம்' ஆகிய படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். அஜித்துக்கு மிகவும் நெருங்கிய நண்பராக வலம் வருபவர். தற்போது இந்திப் படமொன்றை இயக்கி முடித்துள்ளார். அதன் இறுதிக்கட்டப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. அந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப் படமொன்றை இயக்க முடிவு செய்துள்ளார்.
தமிழில் வினோத் இயக்கத்தில் உருவாகும் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார் அஜித். அதற்குப் பிறகு அஜித்தின் அடுத்தபட இயக்குநர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இதனிடையே, அஜித் தனது நீண்ட நாள் நண்பரான விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக விசாரித்தபோது, "கரோனா லாக்டவுன் முடிந்து எப்போது 'வலிமை' படப்பிடிப்பு முடியும் என்பதே தெரியாத சூழல் இருக்கிறது. ஆகையால் அஜித் தரப்பிலிருந்து இதுவரை எதையுமே முடிவு செய்யவில்லை. அனைத்துமே 'வலிமை' முடிவடைந்த பிறகுதான்" என்று தெரிவித்தார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago