ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக, ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகனான விஜய்க்கு ஜூன் 22-ம் தேதி பிறந்த நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் அவருடைய ரசிகர்கள் மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடி மகிழ்வார்கள். பிரம்மாண்டமான போஸ்டர்கள், திரையரங்குகளில் விஜய்யின் ஹிட் படங்கள், சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங் எனக் கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தலால் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று ரசிகர் மன்றங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் விஜய். இது தொடர்பாக அனைத்து ரசிகர் மன்றங்களுக்கும் விஜய் தரப்பிலிருந்து தொலைபேசி வாயிலாக உத்தரவு சென்றது.

தனது பிறந்த நாளன்று கரோனா அச்சுறுத்தலால் கஷ்டப்படுபவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய விஜய் தரப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ச்சியாக விஜய் ரசிகர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், கரோனா அச்சுறுத்தலால் கஷ்டப்படும் ரசிகர் மன்றத்தின் உறுப்பினர்களை லிஸ்ட் எடுத்து அவர்களுடைய வங்கிக் கணக்கிற்கு விஜய் தரப்பில் பணம் அனுப்பி வைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

விஜய்யின் வேண்டுகோளால் இந்த ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் பெரிதாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படம் கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் வெளியாகவுள்ளது. தீபாவளிக்குத்தான் வெளியீடு என்பதால் விஜய் பிறந்த நாளன்று, 'மாஸ்டர்' படக்குழுவினர் சார்பில் டீஸர், ட்ரெய்லர் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்