பிரபுதேவா இயக்கத்தில் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' உருவாகவுள்ளதாகவும், அதில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் வெளியான தகவலுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்தது.
2017-ம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா'. நடிகர் சங்கக் கட்டிடத்துக்காக விஷால் - கார்த்தி இருவருமே சம்பளமின்றி ஒப்புக்கொண்ட படம் என்று தகவல் வெளியானது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவான இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து வந்தார். இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே கைவிடப்பட்டது.
இந்தப் படத்தை தற்போது மீண்டும் வேல்ஸ் நிறுவனம் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதில் விஷாலுக்குப் பதிலாக வேறொருவர் நடிக்கவுள்ளதாகவும், முக்கியக் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாராவா என்று பலரும் ஆச்சரியப்பட்டனர்.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்," 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்தை மீண்டும் உருவாக்கவில்லை. இது வெறும் வதந்திதான்" என்று தெரிவித்துள்ளார்
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago