வடிவேலு என்னை மன்னிச்சுடு: புகார் தொடர்பாக மனோபாலா விளக்கம்

By செய்திப்பிரிவு

தன் மீது புகார் அளித்திருப்பது தொடர்பாக மன்னிப்புடன் மனோபாலா விளக்கமளித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பாக சிங்கமுத்து மற்றும் மனோபாலா இருவர் மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார் வடிவேலு. என்னவென்றால், மனோபாலா நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், வடிவேலு குறித்து சிங்கமுத்து பேசியிருந்தார். இந்தப் பேட்டியை நடிகர் சங்க குரூப்பில் மனோபாலா பகிர்ந்துள்ளார். இதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார் வடிவேலு.

முன்பாக, வடிவேலு - சிங்கமுத்து இருவருக்குமே நில விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்தப் புகார் தொடர்பாக மனோபாலா அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

"எனக்கு நெருங்கிய நண்பர் வடிவேலு. மீண்டும் வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பேசி வந்தேன். அவர் ஒரு அப்ராணி. யார் என்ன சொன்னாலும் நம்பிவிடுவார். அவரை யாரோ யூஸ் பண்ணிக் கொள்கிறார்கள். இந்த கரோனா ஊரடங்கில் கூட வடிவேலு காமெடி இல்லாத தொலைக்காட்சியே இல்லை. அப்படி ஒரு மண் சார்ந்த கலைஞர் வடிவேலு.

சிங்கமுத்து பல பேட்டிகளில் சொல்லியிருப்பதைத் தான் எனது பேட்டியிலும் சொல்லியிருக்கிறார். அவருடைய திரையுலகப் பயணத்தைப் பற்றிப் பேசும் போது வடிவேலுவைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. ஏனென்றால் வடிவேலு இல்லாமல் சிங்கமுத்து கிடையாது. அப்படித்தான் வடிவேலு பற்றி பேச்சு வந்தது. இதை ஏன் வடிவேலு இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொண்டார் என்று தெரியவில்லை.

நமது நண்பர் மனோபாலா இப்படிச் செய்துவிட்டாரே என்று வடிவேலு நினைத்திருக்கலாம். என்னை அழைத்து அது வேண்டாம் மனோபாலா தூக்கிவிடு என்று சொல்லியிருக்கலாம். நடிகர் சங்கத்தில் போய் புகார் அளிக்க வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. வடிவேலு என்னை மன்னித்துவிடு. உனது நட்பை நான் இழக்க விரும்பவில்லை. அனைத்துமே கூடிய விரைவில் மாறும்"

இவ்வாறு மனோபாலா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

58 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்