இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குநர் சீனு ராமசாமி வாழ்த்துப்பா ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜாவுக்கு இன்று (மே 2) பிறந்த நாள். இதனால் சமூக வலைதளத்தில் பலரும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குநர் சீனு ராமசாமி வாழ்த்துப்பா ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.
அந்த வாழ்த்துப்பா பின்வருமாறு:
எழுபதுகளில் தொடங்கிய எங்கள் பண்ணைபுரத்துப்
பாணனே
மேற்குத்தொடர்ச்சி
மலையிலே
மிதந்து வந்த மேகமே
உமது வருகையை
எதிர்பார்த்து
இசையின் வாசல்
காத்திருந்தது
கருப்பு வெள்ளை
அன்னக்கிளியாள்
பாட்டிசைக்க
எங்கள் இதயத்தில்
வண்ணக்கிளிகள் பறந்தன
அன்று பெய்யத் தொடங்கிய மழை
இசையின் சிரபுஞ்சியானது
தவிலின் நாவுகளைப்
பேச வைத்தாய்
தமிழிசைக்கே அது
முதுகெலும்பானது
உமது மூச்சு
புல்லாங்குழலுக்கு சுவாசம்
உமது வயலின்கள்
சலனப்படமென
எங்கள் சாலைகளை
உயிர்ப்புறச் செய்தது
உமது சங்கீதம் எங்கள்
நினைவுத் தடத்தில்
பூத்த பூ
காலத்தின் பிம்பம்
கடிகாரத்தின்
பென்டுல சப்தம்
தூக்கத்திற்கு முன்
எம்மைத் தீண்டும்
அமைதித் தென்றல்
நீர் ஆர்மோனியத்தில்
விரல் வைத்தீர்
எங்கள் செங்காட்டு பூமியில்
பெயர் தெரியாச்
செடி ஒன்று
பூ பூத்தது
இசைஞானியே
வெண்பா இயற்றிய
தமிழ் ஞானியே
நீர் சுற்றியதால்
கிரிவலம்
இசைத்தட்டானது
எனதன்பு பிறந்தநாள்
வாழ்த்துக்கள்.....
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago