தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ள மியா ஜார்ஜ்

By செய்திப்பிரிவு

தொழிலதிபர் அஸ்வின் பிலிப்பை திருமணம் செய்யவுள்ளார் மியா ஜார்ஜ். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தமிழில் 'அமர காவியம்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். அதனைத் தொடர்ந்து 'இன்று நேற்று நாளை', 'வெற்றிவேல்', 'ஒரு நாள் கூத்து', 'ரம்', 'எமன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரம் நடித்து வரும் 'கோப்ரா' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் அறிமுகமாகும் முன்பே மலையாளத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் மியா ஜார்ஜ். தற்போது இவருக்கு வீட்டில் திருமணம் முடிவு செய்துள்ளனர். கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் அஸ்வின் பிலிப் என்பவரை திருமணம் செய்யவுள்ளார் மியா ஜார்ஜ். இருவருடைய நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத் தேதி இன்னும் முடிவாகவில்லை. செப்டம்பரில் திருமணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் திருமணம் குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று அஸ்வின் பிலிப் - மியா ஜார்ஜ் குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். அஸ்வின் பிலிப் வீட்டில் நடைபெற்ற சின்ன நிகழ்ச்சியில் மியா ஜார்ஜ் குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் மியா ஜார்ஜுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்