'சந்திரமுகி 2' படத்துக்காக தன்னை யாரும் அணுகவில்லை எனவும், அது போலி செய்தி என்று சிம்ரன் தெரிவித்துள்ளார்.
பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சந்திரமுகி'. சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. தற்போது 'சந்திரமுகி' படத்தின் 2-ம் பாகம் உறுதியாகியுள்ளது.
தற்போது 'சந்திரமுகி 2' உறுதியாகியுள்ளது. பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தின் ஜோதிகா நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. சமீபத்தில் 'பொன்மகள் வந்தாள்' படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியில் "'சந்திரமுகி' 2-ம் பாகத்தில் நான் இல்லை என நினைக்கிறேன். எனக்கு எந்தவொரு தகவலுமே இல்லை. அந்தப் படத்துக்காக இதுவரை யாருமே கேட்கவும் இல்லை" என்று தெரிவித்தார் ஜோதிகா.
அப்போது 'சந்திரமுகி 2'வில் சிம்ரன் நடித்தால் நன்றாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார் ஜோதிகா. உடனே பலரும் 'சந்திரமுகி 2'-வில் சிம்ரன் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியிட்டனர். பெரும் வரவேற்பைப் பெற்ற படத்தின் 2-ம் பாகம் என்பதால் இந்த வதந்தி வைரலானது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிம்ரன் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
"அது ஒரு போலி செய்தி. ரசிகர்களை ஏமாற்றியதற்கு வருந்துகிறேன்.. எந்த படத்துக்காக கதாபாத்திரத்துக்காகவும் என்னை யாரும் அணுகவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். அதை ஊடகங்களில் பதிப்பிக்கும் முன்னர் சரிபார்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை வைக்கிறேன்"
இவ்வாறு சிம்ரன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
50 mins ago
சினிமா
39 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago