‘காட்மேன்’ இணையதள தொடர்; இயக்குநர் - தயாரிப்பாளர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு: மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

‘காட்மேன்’ தொடர் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.

‘காட்மேன்’ என்ற பெயரில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், இளங்கோ தயாரிப்பில் இணைய தள தொடர் உருவாக்கப்பட்டுள் ளது. வரும் 12-ம் தேதி பிரபல நிறு வனம் மூலம் ஆன்லைனில் வெளி யிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த தொடரின் டிரெய்லர் அண்மையில் வெளி யிடப்பட்டது. அதில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும், மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் காட்சி கள், வசனங்கள் இடம் பெற்றிருப் பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து இந்த தொடரை தடை செய்ய வேண்டும், இயக் குநர், தயாரிப்பாளர் மீது சட்ட நட வடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலு வலகத்தில் இந்து அமைப்பினர் அண்மையில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்த சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு காவல் ஆணை யர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தர விட்டார். அதன்படி, போலீஸார் விசாரணையில் இறங்கினர். முதல்கட்டமாக ‘காட்மேன்’ தொட ரின் இயக்குநர் பாபு யோகேஸ் வரன், தயாரிப்பாளர் இளங்கோ மீது கலவரத்தை ஏற்படுத்துதல், பகையை ஊக்குவித்தல், வதந்தியை பரப்புதல் உட்பட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் நேரில் ஆஜராக சம்மனும் அனுப்பி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

சினிமா

39 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்