மசாலா சினிமாவின் மாயக்காரர் அட்லி: கரண் ஜோஹர் புகழாரம்

By செய்திப்பிரிவு

மசாலா சினிமாவின் மாயக்காரர் அட்லி என்று கரண் ஜோஹர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் கரண் ஜோஹர். இவருடைய தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பல பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்துள்ளது. பல்வேறு முன்னணி நடிகர்கள் இவருடைய தயாரிப்பில் அறிமுகமானவர்களாக இருக்கும் அல்லது இவருடைய இயக்கத்தில் நடித்தவர்களாக இருக்கும்.

தற்போது 'அசுரன்' படத்தையும் அட்லியையும் புகழ்ந்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார் கரண் ஜோஹர். அந்தப் பேட்டியில் கரண் ஜோஹர் கூறியிருப்பதாவது:

"வெற்றிமாறனின் 'அசுரன்' பார்த்தேன். கடவுளே என்னவொரு படம். தனுஷ் ஒரு அற்புதமான நடிகர். பார்க்கும்போது சீட்டின் நுனிக்கு வந்துவிட்டேன். அட்லியின் 'பிகில்' படம் எனக்கு பிடித்திருந்தது. அது ஒரு பாக்ஸ் ஆபீஸ் ஹிட். அவருடைய எல்லா படமும் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மசாலா சினிமாவின் மாயக்காரர் அவர்"

இவ்வாறு கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.

'பிகில்' படத்துக்குப் பிறகு அட்லி இயக்கத்தில் ஷாரூக் கான் நடிக்கவுள்ள படத்தை ஷாரூக் கான் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து கரண் ஜோஹரும் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவுமே வெளியாகவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்