'பொன்மகள் வந்தாள்' படத்துக்கு ஜோதிகாவின் சம்பளம் என்ன என்ற கேள்விக்கு சூர்யா பதிலளித்துள்ளார்.
ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள முதல் படமாக அமைந்துள்ளது.
'பொன்மகள் வந்தாள்' படம் குறித்த விமர்சனங்கள் மற்றும் ஜோதிகாவின் நடிப்பு உள்ளிட்டவை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்தப் படத்தை விளம்பரப்படுத்த சூர்யா - ஜோதிகா இணைந்து பேட்டியொன்று அளித்துள்ளார்கள்.
அதில் "’36 வயதினிலே’ படத்துக்கு என்ன சம்பளம் தந்தீர்கள் என்பது பற்றி அப்போது கூறியிருந்தீர்கள், அது இப்போது மாறியிருக்கிறதா? ’பொன்மகள் வந்தாள்’ படத்துக்கு ஜோதிகாவின் சம்பளம் என்ன?" என்று சூர்யா - ஜோதிகா இணையிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு சூர்யா, "2 டி நிறுவனமே ஜோதிகாவின் சம்பளத்தை வைத்துத்தான் நடக்கிறது. நாங்கள் எங்களுக்குள் மாற்றி மாற்றி பணச் சுழற்சி செய்வோம்" என்று பதிலளித்தார். உடனே ஜோதிகா, "இல்லை இல்லை, எனக்கு கிடைத்த மிகப்பெரிய சம்பளமே சூர்யாவின் ஒட்டுமொத்த ரசிகர் மன்றங்கள் தான்.
தமிழ்நாட்டில் நடிகர்கள் அளவுக்கு நடிகைகளுக்கு ரசிகர் மன்றம் இருக்காது. எனது ஒரு ட்ரெய்லர், டீஸர் வந்தால் ஜோதிகா ரசிகர்கள் பார்ப்பதற்குள் சூர்யாவின் ரசிகர்கள் தான் அதற்குப் பெரிய வரவேற்பைக் கொடுக்கிறார்கள்" என்று கூறினார்.
இறுதியாக சூர்யா, "ஆனால் ஜோதிகாவின் வங்கிக் கணக்குக்கு நன்றி. அதை வைத்து 2டி நிறுவனத்தை நாங்கள் தொடர்ந்து நடத்துகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago